செய்திகள் உலகம்
பாகிஸ்தானில் சீனாவின் மோசடி கால் சென்டர்: பொது மக்கள் கொள்ளை
இஸ்லாமபாத்:
பாகிஸ்தானில் போலீஸார் ரெய்டு நடத்திய மோசடி கால் சென்ட்டரில் இருந்த கம்ப்யூட்டர், லேப்டாப், பர்னிச்சர்களை பொது மக்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமபாத்தில் சீனாவைச் சேர்ந்த சிலர் கால் சென்ட்டர் நடத்தினர். இதில் வெளிநாடு, உள்நாட்டைச் சேர்ந்தவர்கள் பணியாற்றினர். இந்த கால் சென்ட்டர், உலக முழுவதும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தது தெரியவந்தது. இது குறித்து பாகிஸ்தான் அரசுக்கு புகார் அளிக்கப்பட்டதும், அந்த கால் சென்ட்ரில் போலீஸார் சோதனை நடத்தினர்.
மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக, அங்கு பணியாற்றிய 24 ஊழியர்களை கைது செய்தனர். சிலர் தப்பிச் சென்றனர்.
இதுபற்றி தகவல் அறிந்த இஸ்லாமாபாத் மக்கள் அந்த கால் சென்ட்டரில் புகுந்து அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்தனர். கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள், பிரின்டர்கள், கீ போர்டுகள், பர்னிச்சர்கள் என கையில் கிடைத்த பொருட்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு வெளியேறினர். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது. இது குறித்து இணையவாசிகள் பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஒருவர் கூறுகையில், ‘‘பாகிஸ்தானில் தொழில் தொடங்குவது கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதைவிட ஆபத்தானது’’ என குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர்,
‘‘ சீனா ஒட்டுமொத்த பாகிஸ்தானையும், கொள்ளையடித்தது. பாகிஸ்தானியர்கள், சீனாவின் ஒரு சில கம்ப்யூட்டர்கள் மற்றும் பிரின்டர்களை கொள்ளையடித்தனர்’’ என தெரிவித்துள்ளார். இது போல் பலரும் சுவாரஸ்யமான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
January 1, 2026, 9:05 pm
ஆம்ஸ்டர்டாமின் வரலாற்று சிறப்புமிக்க தேவாலயம் தீ பிடித்தது
January 1, 2026, 5:51 pm
ஜொஹ்ரான் மம்தானி திருக்குர்ஆன் மீது சத்தியம் செய்து பதவியேற்றார்
January 1, 2026, 11:39 am
சிங்கப்பூரில் களை கட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்
December 30, 2025, 10:03 pm
கலீதா ஜியா மறைவுக்கு வங்கதேசத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும்: தலைமை ஆலோசகர் முஹம்மது யூனுஸ் அறிவிப்பு
December 30, 2025, 4:54 pm
பசிபிக் கடலில் அமெரிக்க இராணுவம் திடீர் தாக்குதல்: இருவர் பலி
December 29, 2025, 5:40 pm
இந்தோனேசிய முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீயில் 16 பேர் கருகி மாண்டனர்
December 29, 2025, 11:17 am
மெக்சிகோவில் மோசமான ரயில் விபத்து: 13 பேர் மரணம்
December 28, 2025, 10:22 pm
தோக்கியோ மிருகக்காட்சி சாலையில் இருந்து தப்பியோடிய ஓநாய்
December 28, 2025, 4:18 pm
