
செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ண தகுதிச் சுற்றில் 2 ஆட்டங்களில் இருந்து லியோனல் மெஸ்சி விலகல்
போனஸ் அயர்ஸ்:
அர்ஜெண்டினாவின் கேப்டன் லியோனல் மெஸ்சி உலகக் கிண்ண தகுதிச் சுற்றின் முக்கியமான 2 ஆட்டங்களில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022இல் நடைபெற்ற உலகக் கிண்ண போட்டியில் மெஸ்சி தலைமையிலான அர்ஜெண்டினா அணி வென்றது.
37 வயதாகும் லியோனல் மெஸ்சி தற்போது இந்தர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில் உருகுவே, பிரேசில் உடனான உலகக் கிண்ண தகுதிச் சுற்றுக்கான அர்ஜெண்டினா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மெஸ்சியைத் தவிர்த்து 25 பேர் கொண்ட அணியை லியோனல் ஸ்கலோனிஅறிவித்தார்.
கடைசியாக நடந்த போட்டியில் மெஸ்சி தனது 854ஆவது கோலை அடித்து அசத்தினார். அந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதும் வென்றார்.
பிறகு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் அவரது தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.
இது குறைவான தாக்கம் கொண்ட காயம் என்பதால் விரைவிலே குணமாகிவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 31, 2025, 11:38 am
எப்ஏ கிண்ண அரையிறுதியில் மென்செஸ்டர் சிட்டி
March 30, 2025, 9:54 am
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: அரையிறுதியில் கிறிஸ்டல் பேலஸ்
March 30, 2025, 9:52 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
March 28, 2025, 10:15 am
கிளப்புகளுக்கான உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ரொனால்டோவும் மெஸ்ஸியும் ஒரே அணியில் விளையாடலாம்?
March 28, 2025, 10:14 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
March 27, 2025, 12:45 pm
ஆணவத்தில் பேசிய பிரேசில் வீரருக்கு தன்னடக்கத்துடன் பாடம் கற்பித்த அர்ஜெண்டினா
March 27, 2025, 12:44 pm
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி சிங்கப்பூர், இந்தியா வருகிறார்
March 26, 2025, 10:27 am