நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சிலாங்கூர் கோஜூ காய் கராத்தே சங்கத்தின் வருடாந்திர விருந்துபசரிப்பு: விமரிசையாக நடைபெற்றது

காஜாங்:

சிலாங்கூர் கோஜூ காய் கராத்தே சங்கத்தின் வருடாந்திர விருந்துபசரிப்பு மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

இந்த விருந்துபசரிப்பு அண்மையில்  காஜாங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர்  தியாகராஜா ராஜகோபால் சிறப்பு வருகை தந்து அதிகாரப்பூர்வமாக நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் ஐவருக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

International Karate-Do Goju Kai Association (IKGA), ஜப்பான் வழங்கிய பயிற்றுநர் சான்றிதழ்களை 5 பேர் அதிகாரப்பூர்வமாகப் பெற்றனர்.

இந்த சான்றிதழ்கள்
துவான் தியாகராஜா ராஜகோபால், மாஸ்டர் யொண்டான் ஜே. சிதம்பரம், சென்செய் எஸ். பிரபகரன் ஆகியோரால் வழங்கப்பட்டன.

இந்த ஆண்டு  விருந்து நிகழ்ச்சியில் 150க்கும் மேற்பட்ட  மாணவர்கள், பெற்றோர், பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.

சாதனைகளை கொண்டாடுவது. கடின உழைப்பை பாராட்டுவது, ஒற்றுமையை வலுப்படுத்துவது, சங்கத்தின் மதிப்பீடுகள், எதிர்கால நோக்கத்தை உறுதிப்படுத்து ஆகிய நோக்கங்களுக்காக இவ்விருந்து நடத்தப்பட்டது.

மேலும், பல்வேறு சாம்பியன்ஷிப் போட்டிகளில்  பங்கேற்று பதக்கம் பெற்ற அனைத்து வீரர்களையும் சங்கம் கௌரவித்து பாராட்டியதோடு பலருக்கு சாம்பியன்ஷிப் விருதுகளையும் வழங்கியது.

விருது பெற்றோர் பட்டியல் – 2025

1) சிறந்த செயல்திறன் விருது – 2025

கத்தா  (KATA) பிரிவு
    1.    ஜி. யுகேந்தேவன்
    2.    எஸ். யுவஸ்ரீ

குமித்தே  (KUMITE) பிரிவு
    1.    வி. திரிசாந்த்
    2.    தனுஷ்கா
    3.    நாதுரன்

2) சிறந்த வருகை விருது – 2025
    1.    அவினாஷ்
    2.    தெஸ்வின் நாயர்

3) சிறந்த ஆதரவளிக்கும் பெற்றோர் – 2025
    1.    எலிஸ்
    2.    அமுதா
    3.    கவிதா

4) சென்செய் அர்ப்பணிப்பு விருது – 2025
    1.    வி. சந்திரசேகரன்
    2.    பி. தனராஜ்
    3.    எம். நரேஷ்
    4.    எஸ். பிரபகரன்
    5.    ஹஸ்னாஃபர் அலிகான் (ஹசன்)

ஆண்டின் சிறந்த பயிற்றுநர் – 2025
    1.    ஐ.  தயாவரன்

5) ரைசிங் ஸ்டார் விருது – 2025
    1.    ஜே.  நவநிதன்
    2.    ஜே. மகேஸ்வர்

6) பன்முகத் திறமை விருது – 2025
    1.    ஆர். கார்த்திகேயன்

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset