நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கான டிக்கெட்டுகளை பிபா 245 ரிங்கிட்டாகக் குறைத்துள்ளது

ஜூரிச்:

உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கான டிக்கெட்டுகளை ஃபிஃபா 245 ரிங்கிட்டாகக் குறைத்துள்ளது.

இதனை பிபா ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.

அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் 2026 இறுதிப் போட்டிகளுக்கான டிக்கெட் விலைகள் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இதை தொடர்ந்து, உலகக் கிண்ண ஏற்பாட்டாளர்கள் செவ்வாய்க்கிழமை மலிவான டிக்கெட் வகைகளை அறிவித்தனர்.

ஒவ்வொன்றும் US$60 (RM245) விலையில் நுழைவு நிலை ரசிகர் டிக்கெட்டுகளை உருவாக்கி வருவதாகவும், இறுதிப் போட்டி உட்பட அனைத்து 104 போட்டிகளுக்கும் வழங்கப்படும் என்றும் கூறியது.

இந்தத் திட்டம் போட்டி முழுவதும் தங்கள் தேசிய அணிகளைப் பின்தொடர பயணிக்கும் ரசிகர்களை ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த டிக்கெட்டுகள் தகுதிவாய்ந்த அணிகளின் ஆதரவாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

அவை ஒவ்வொரு தேசிய கூட்டமைப்பின் ஒதுக்கீட்டில் 10 சதவீதமாகும் என்றும் பிபா தெரிவித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset