நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சர்ஃபராஸ் கான், மேத்யூ ஷார்ட், மாட் ஹென்றி மூவரையும் ஏலத்தில் எடுத்த சி எஸ் கே 

அபுதாபி:

ஐபிஎல் மினி ஏலத்தில் சர்ஃபராஸ் கான், மேத்யூ ஷார்ட், மாட் ஹென்றி மூவரையும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலத்தில் எடுத்துள்ளது.

ஐபிஎல் மினி ஏலம் அபுதாபியில் நேற்றுமுதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடும் 10 அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரர்களை போட்டிப் போட்டுக் கொண்டு ஏலத்தில் எடுத்து வருகின்றனர்.

ஏலத்தில் எப்போதும் மூத்த வீரர்களை குறிவைக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த மினி ஏலத்தில் இரண்டு அன்கேப்டு வீரர்களை ரூ. 28.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்து வரலாறு படைத்தது.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர் அகீல் ஹொசைன் ரூ. 2 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

இவர்களை தவிர்த்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சர்ஃபராஸ் கான், மேத்யூ ஷார்ட், மாட் ஹென்றி மூவரும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

சர்ஃபராஸ் கான் ரூ. 75 லட்சம், மேத்யூ ஷார்ட் ரூ. 1.50 கோடி, மாட் ஹென்றி ரூ. 2 கோடிக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset