நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உயிர் பிழைத்தால் போதுமென சென்னை திரும்பினோம்: மெஸ்ஸியை பார்க்க சென்ற சென்னை ரசிகர்கள் வேதனை 

சென்னை:

மெஸ்ஸியை பார்க்க கொல்கத்தா சென்ற ரசிகர்​கள், உயிர் பிழைத்​தால் போதும் என்று சென்னை திரும்​பிய​தாக வேதனையோடு தெரி​வித்​தனர்.

கால்​பந்து விளை​யாட்​டின் ஜாம்​ப​வான் மெஸ்ஸி 3 நாட்​கள் பயண​மாக இந்​தியா வந்​துள்​ளார். முதல் நாளான சனிக்​கிழமை கொல்​கத்தா சால்ட் லேக் மைதானத்​தில், மெஸ்ஸி கலந்து கொள்​ளும் நிகழ்ச்சி நடந்​தது. தமிழகத்​தைச் சேர்ந்த ரசிகர்​களும் கொல்​கத்​தாவுக்கு மெஸ்​ஸியை பார்ப்​ப​தற்​காக சென்​றிருந்​தனர்.

இந்​நிலை​யில், மைதானத்​தில் சிறிது நேரமே இருந்த மெஸ்ஸி உடனடி​யாக அங்​கிருந்து புறப்​பட்டுச் சென்று விட்​ட​தால் ரசிகர்​கள் ஆத்​திரமடைந்து வன்​முறை​யில் ஈடு​பட்​டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்​பட்​டது.

சென்​னை​யில் இருந்து ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்து கொல்​கத்தா சென்​றோம். அரசி​யல் பிர​முகர்​கள்​தான் அவரை சூழ்ந்து கொண்டு புகைப்​படம் எடுக்க முயற்​சித்​துக் கொண்​டிருந்​தனர் அவர்கள் வேதனையுடன் கூறினர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset