நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சீ விளையாட்டு போட்டியில் மலேசியா 200 பதக்க இலக்கை அடைந்தது

பேங்காக்:

சீ விளையாட்டு போட்டியில் மலேசியா 200 பதக்க இலக்கை அடைந்துள்ளது.

தாய்லாந்து பேங்காக்கில் சீ விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் பேங்காக்கில் உள்ள ஹுவா மார்க் வெலோட்ரோமில் நடந்த ஆண்கள் அணிப் போட்டியில் தேசிய டிராக் சைக்கிள் ஓட்டுதல் அணி தங்கம் வென்றது.

இதை அடுத்து, மலேசிய அணி 200 பதக்கங்கள் என்ற இலக்கை அடைந்தது.

மலேசியாவின் அசிம் அலியாஸ், ஹபிக் ஜாப்ரி, யுஸ்ரி ஷாரி நியூஜோ லாவ் ஆகியோர் அடங்கிய தேசிய அணி, இறுதிப் பந்தயத்தில் துடிப்பாக செயல்பட்டு.தாய்லாந்து அணியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றனர்.

முன்னதாக, இந்தோனேசியா அணி தகுதிச் சுற்றில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டபோது பதக்கத்திற்காக சவால் செய்யும் வாய்ப்புகள் பறிக்கப்பட்டன.

இதனால் அவர்கள் போடியம் பந்தயத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset