நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மீண்டும் இந்தியா வருவேன்: லியோனல் மெஸ்ஸி

புதுடில்லி:

இந்திய மக்களின் அன்பை, நாங்கள் எடுத்துக் செல்கிறோம். மீண்டும் கட்டாயம் இந்தியா வருவேன்.

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி இதனை கூறினார்.

அர்ஜெண்டினா கால்பந்து அணி கேப்டன் மெஸ்ஸி 38. 

இவரது தலைமையிலான அர்ஜெண்டினா அணி, 2022ல் ஃபிஃபா உலகக் கிண்ணத்தை வென்றது.

கோட் இந்தியா டூர் 2025 என்ற திட்டத்தின் படி, மூன்று நாள் பயணமாக இந்தியா வந்தார்.

அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் மெஸ்ஸி 38. இவரது தலைமையிலான அர்ஜென்டினா அணி, 2022ல் 'பிபா' உலக கோப்பை வென்றது. 'கோட் இந்தியா டூர் 2025' என்ற திட்டத்தின் படி, மூன்று நாள் பயணமாக இந்தியா வந்தார்.

நேற்று மூன்றாவது, கடைசி நாளில் காலை 10:45 மணிக்கு டில்லி வர இருந்தார் மெஸ்ஸி. 

ஆனால் பனிமூட்டம் காரணமாக தாமதமாக, மதியம் 2:30 மணிக்கு தான் டில்லி விமான நிலையம் வந்தார். 

இவருடன் உருகுவேயின் லுாயிஸ் சாரஸ், அர்ஜெண்டினா அணி மத்தியகள வீரர் ரோட்ரிகோ டி பால் வந்தனர்.

இந்நிலையில் இந்திய பயணம் எங்களுக்கு நல்ல அனுபவமாக இருந்தது. 

இதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.  இது வித்தியாசமாக இருந்தது. 

உங்களிடம் இருந்து கிடைத்த அன்பை, நாங்கள் எடுத்துச் செல்கிறோம். கட்டாயம் மீண்டும் இந்தியா வருவேன். 

இங்கு எப்படியும் ஒருநாள் கால்பந்து போட்டியில் பங்கேற்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. அனைவருக்கும் நன்றி என்றார் அவர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset