நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சீ விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று மலேசிய ஆண்கள் கபடி அணி வரலாறு படைத்தது

பேங்காக்:

சீ விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று மலேசிய ஆண்கள் கபடி அணி வரலாறு படைத்துள்ளது.

பேங்காக்கில் உள்ள ராஜமங்கலா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடந்த மூன்று நட்சத்திரப் போட்டியில்,

தேசிய அணி 28-16 என்ற கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தி மலேசியாவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தது.

இருப்பினும்.இறுதிப் போட்டியில் இந்தோனேசியாவிடம் பெண்கள் அணி 22-23 என தோல்வி கண்டதை தொடர்ந்து, தேசிய கபடி அணி இரட்டை கொண்டாட்டத்தைத் தவறவிட்டது.


முன்னதாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சீ விளையாட்டுப் போட்டிகளில் முதல் முறையாக கபடி போட்டி நடைபெற்றது.

இதில் மலேசிய அணி தங்கப்பதக்கம் வென்றது மிகப் பெரிய வரலாறு என்று மலேசிய கபடி சங்கத்தின் தலைவர் பீட்டர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset