நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

லியோனல் மெஸ்ஸி இந்திய சுற்றுப்பயணத்தை நிறைவு செய்தார் 

டெல்லி:
 
38 வயதான அர்ஜென்டினா சூப்பர் ஸ்டார் லியோனல் மெஸ்ஸி, கிரிக்கெட் அதிகமாக விளையாடப்படும் இந்தியாவில் தனது பல நாள் சுற்றுப்பயணத்தை தலைநகர் நியூ டெல்லியில் முடித்தார்.

அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான், பொதுவாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில், கிட்டத்தட்ட நிரம்பிய அரங்கில் முழங்கும் ரசிகர்களை சந்தித்தார். அர்ஜென்டினா ஜெர்ஸிகளை அணிந்த ரசிகர்கள் கொடிகளை அசைத்து, அவரது பெயரை முழங்கினர்.

 “இவ்வளவு அன்பும் ஆதரவும் எனக்கு இந்தியாவில் கிடைத்தது மிகவும் அழகான அனுபவம். அன்பு இருக்கிறது என்று எனக்குத் தெரியும், ஆனால் அதனை நேரடியாக அனுபவிப்பது உண்மையிலேயே அற்புதம்,” என்று மெஸ்ஸி ஸ்பானிஷ் மொழியில் பேசினார். அவர் “நிச்சயமாக மீண்டும் வருவேன்” என்றும் கூறினார்.

இளஞ்சிவப்பு ஜெர்ஸியும் கருப்பு பேன்டும் அணிந்த மெஸ்ஸி, பந்துகளை ரசிகர்களிடையே அடித்து அனுப்பி, பிரபலங்களும் ரசிகர்களும் எடுத்துக் கொள்ளும் செல்ஃபிகளுக்கு சம்மதம் அளித்து பார்வையாளர்களை கவர்ந்தார்.

திங்கள்கிழமை நியூ டெல்லியில், அபாயகரமான மூச்சுத்திணறலை ஏற்படுத்தும் காற்று மாசையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தங்கள் நாயகனைப் பார்க்க திரண்டு வந்தனர்.

ஸ்டேடியத்தில் 35 நிமிடங்கள் தங்கியிருந்த அவர், ரசிகர்களை உற்சாகப்படுத்தி மகிழ்ச்சி அடைந்தார். ரசிகர்களும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். கல்கத்தாவில் நடைபெற்றது போல் அல்லாமல் மிக கனகச்சிதமாக நிகழ்ச்சியை ஏற்பாட்டாளர்கள் செய்திருந்தனர்.

மெஸ்ஸி ஹைதராபாத், மும்பை நகரங்களுக்கும் சென்றிருந்தார். அங்கு அவர் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், இந்திய கால்பந்து நட்சத்திரம் சுனில் சேத்ரி ஆகியோரை சந்தித்தார்.

இன்டர் மயாமியை MLS சாம்பியன் பட்டத்திற்கு வழிநடத்தி, லீகில் அதிக கோல்கள் அடித்ததன் மூலம், கடந்த வாரம் மெஸ்ஸி தொடர்ந்து இரண்டாவது முறையாக மேஜர் லீக் சாக்கர் (MLS) ‘மோஸ்ட் வேல்யூபிள் பிளேயர்’ (MVP) விருதை வென்றார்.

முன்னாள் பார்சிலோனா, பாரிஸ் செயின்ட்-ஜெர்மேன் அணியின் முன்னணி வீரரான அவர், ஜூன்–ஜூலை மாதங்களில் வட அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டியில் அர்ஜென்டினா அணியின் பட்டம் காக்கும் முயற்சிக்கு தலைமை தாங்க உள்ளார்.

- கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset