நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சிங்கப்பூர் ஓட்டப்பந்தய முன்னாள் வீராங்கனை ரேணுகா சத்தியநாதன் காலமானார் 

சிங்கப்பூர்:

சிங்கப்பூர் ஓட்டப்பந்தய முன்னாள் வீராங்கனை ரேணுகா சத்தியநாதன் காலமானார். அவருக்கு 37 வயது.

அவரது நல்லுடல் மண்டாய் தகனச் சாலையில் நேற்று முன் தினம் (16 மார்ச்) தகனம் செய்யப்பட்டது. 

ரேணுகா சிங்கப்பூரைப் பிரதிநிதித்து 2011ஆம் ஆண்டும் 2015ஆம் ஆண்டும் தென்கிழக்காசிய போட்டியில் பங்கேற்றுள்ளார். 2011இல் அவர் பெண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டத்தில் 5ஆவது இடத்தைப் பிடித்தார். 2015இல் சிங்கப்பூர் போட்டிகளை ஏற்று நடத்தியபோது அவர் பெண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டத்தில் பங்கெடுத்தார். 

அந்த 2 போட்டிகளுக்கும் இடையே அவர் தமது உயர்கல்வியைத்  தொடர்ந்தார். ஆஸ்திரேலியாவில் மொழியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் இனோவா தொடக்கக் கல்லூரியில் (Innova Junior College) தம்மை முழுநேர ஆசிரியராக அர்ப்பணித்துக்கொண்டார். 

ரேணுகாவின் மறைவு குறித்து அவரது சகோதரர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

அவரது மரணத்துக்கான காரணத்தைக் கண்டறிய காவல்துறை விசாரணை மேற்கொள்வதாக அவர் அதில் கூறியிருக்கிறார்.

- ரோஷித் அலி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset