நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு ரயில்களும் பேருந்துகளும் அலங்கரிக்கப்பட்டுள்ளன 

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு ரயில்களும் பேருந்துகளும் புதுப்பொலிவு பெற்றிருக்கின்றன.

நிலப் போக்குவரத்து ஆணையம், மலாய் மரபுடைமை நிலையம், பல்வேறு போக்குவரத்து நிறுவனங்கள் ஆகியவை இணைந்து அந்த முயற்சியில் இறங்கின.

இன்று தொடங்கி 6 ரயில் பாதைகளில் உள்ள சில ரயில்களும் சில பேருந்துச் சேவைகளும் அலங்காரங்களைக் கொண்டிருக்கும்.

பாரம்பரிய உடையணிந்த குடும்பங்களின் வண்ணவண்ணப் படங்கள்.

May be an image of 1 person, train and text

May be an image of train

உணவு வகைகள், பாத்திக் வடிவங்கள் போன்ற அம்சங்கள் பயணிகள் பார்த்து ரசிப்பதற்காகச் சேர்க்கப்பட்டுள்ளன.

அதோடு நோன்புப் பெருநாள் குறித்த சுவைத் தகவல்களும் உண்டு.

May be an image of 5 people

அடுத்த மாதம் 27ஆம் தேதிவரை பொதுமக்கள் அலங்காரங்களைக் கண்டுகளிக்கலாம்.

இன்றைய அறிமுக நிகழ்ச்சியில் பயணிகளுக்கும் விருந்தினர்களுக்கும் சிறப்பு அங்கங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

- ரோஷித் அலி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset