
செய்திகள் உலகம்
ஆதரவற்ற ஆண்களுக்காக Father's endowment: துபாய் துணை அதிபர் அறிவிப்பு
துபாய்:
ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதம் அமீரக ஆட்சியாளர்கள் ஒரு மனிதநேய திட்டம் அறிவித்து அதை மக்களின் பங்களிப்புடன் செயல்படுத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு ரமலான் மாதத்தின் நிதிசேகரம் Mother's Endowment என்று அறிவிக்கப்பட்டு அமீரகத்தின் முதிர்ந்த தாய்மார்கள் நலன், சிகிச்சை, பராமரிப்பு தேவைகளுக்கு செலவு செய்யப்பட்டது.
அதைப்போல இந்த ரமலான் மாதம் அமீரகத்தின் ஆதரவற்ற நிலையில் வசிக்கும் மூத்த ஆண்களுக்கு உரிய சிகிச்சை, தங்கும் வசதிகளுடன் கூடிய பராமரிப்பு மையம் அமைக்க
நூறு கோடி திர்ஹம் மதிப்பிலான
Father's Endowment நிதி சேகரிக்க
யுஏஇ துணை அதிபரும் துபாய் பிரதமருமான ஷேக் முஹம்மது பின் ராசித் அல் மக்தூம் அறிவிப்பு வெளியிட்டார்.
அமீரகம் முழுவதும் உள்ள தொழில் நிறுவனங்கள், அரபு செல்வந்தர்கள் ரமலான் மாத நன்மையை கருத்தில் கொண்டு தாராளமாக தந்தையர் நிதிக்கு உதவி வருகின்றனர்.
இந்த புண்ணிய மாதத்தில் ஆதரவற்ற முதியோரை அரவணைத்து கண்ணியப்படுத்த யுஏஇ ஆட்சியாளர் விடுத்த வேண்டுகோளை ஏற்று
லூலூ குரூப் சேர்மன் எம்ஏ யூசுப் அலி தனது பங்களிப்பாக இந்திய ரூபாய் 47.5 கோடி மதிப்புள்ள 20லட்சம் திர்ஹம் ஸதகா வழங்கியது அவரின் கனிவை, கருணையை வெளிப்படுத்தியுள்ளது..
இந்த தந்தையார் நிதி சேகரிப்பு குறித்து
தனது X தளத்தில் துபாய் பிரதமர்
The Father is the First Role Model
The First Support, The First Teacher
He is the Source of Strength, Wisdom, And Security in Everyone's Lives என்று தனது எண்ணத்தை பதிவு செய்துள்ளார்.
- குளச்சல் அஜீம்
தொடர்புடைய செய்திகள்
April 18, 2025, 5:50 pm
கத்திமுனையில் விமானத்தை கடத்திய நபர்; நடுவானில் சுட்டுக்கொலை
April 18, 2025, 5:40 pm
ஒரு வாழைப் பழம் 25 ரிங்கிட்: விமான நிலையங்களுக்கெல்லாம் ’காட் ஃபாதர்’
April 18, 2025, 1:19 pm
தவறான கணினி மென்பொருள் மூலம் மோசடிச் சம்பவங்கள்: $2.4 மில்லியன் இழந்த சிங்கப்பூரர்கள்
April 17, 2025, 8:23 pm
கொலம்பியாவில் மஞ்சள் காய்ச்சல் அதிகரிப்பு: அரசு அவசரநிலை பிரகடனம்
April 17, 2025, 2:50 pm
சவாலான சூழலை நம்பிக்கையோடு எதிர்க்கொள்வோம்: சிங்கப்பூர் பிரதமர் வோங்
April 17, 2025, 2:22 pm
சீனா அதிபர் ஷி ஜின்பிங் அரசு முறை பயணமாக கம்போடியா நாட்டைச் சென்றடைந்தார்
April 17, 2025, 10:34 am
அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரிக்கு எதிராக கலிப்போர்னியா மாநிலம் வழக்குத் தொடுத்துள்ளது
April 16, 2025, 2:46 pm
இஸ்ரேல் நாட்டவர்கள் மாலத்தீவுக்குள் நுழைய தடை : மாலத்தீவு அரசாங்கம் அறிவிப்பு
April 16, 2025, 11:50 am