நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹோட்டலில் காதலனுடன் தனியாக இருந்த அடுத்தவரின் மனைவி பிடிபட்டார் 

கூலிம்:

சட்டப்படி அடுத்தவரின் மனைவி அந்தஸ்துள்ள ஒரு பெண் தனது காதலனுடன் பாலியல் தொடர்பில் இருந்த போது பிடிபட்டார்.

இந்த சம்பவம்  இன்று அதிகாலை லூனாஸில் உள்ள பட்ஜெட் ஹோட்டலில் நிகழ்ந்தது.

மூன்று குழந்தைகளுக்கு தாயான 33 வயது பெண், தனது 30 வயது காதலனை சந்திக்க பஹாங்கிலிருந்து இங்கு வந்ததாக நம்பப்படுகிறது.

பகாங்கின் ஜெங்காவில் உள்ள ஒரு உணவகத்தில் பணிபுரியும் அவர் தனது உறவினரால் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தனது காதலனை சந்தித்ததாகக் கூறினார்.

அக்காதலன் இன்னும் திருமணமாகவில்லை.

இருப்பினும், அந்தப் பெண் திருமணமான பிறகு அவர்களது உறவு முடிவுக்கு வந்தது. ஆனால் அந்தப் பெண்ணின் உறவினர் அந்த ஆணின் தொலைபேசி எண்ணைக் கொடுத்த பிறகு அவர்கள் சமீபத்தில் மீண்டும் இணைந்தனர்.

அந்த ஆடவர் இங்கு அருகிலுள்ள கூலிம் ஹைடேக் பார்க்கில் பாதுகாப்புக் காவலராகப் பணி புரிகிறார்.

இந்நிலையில் அப்பெண்ணின் கணவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் வந்து பட்ஜெட் ஹோட்டலில் தனது மனைவியை கையும் கலவுமாக பிடித்தார்.

பின் கூலிம் மாவட்ட மத அலுவலக அமலாக்க அதிகாரிகளைத் தொடர்பு கொண்டார்.

இன்று அதிகாலை 3.40 மணிக்கு கைது செய்யப்பட்டதாக கூலிம் மாவட்ட மத அமலாக்க அதிகாரி அன்வர் ஷரிபுதீன் மாட் சாத் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset