நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் ASEAN Malaysia 2025

By
|
பகிர்

இந்தியா-மலேசியா இணைந்து நடத்தும் பிராந்திய பயங்கரவாத எதிா்ப்பு மாநாடு: ஆசியான் நாடுகள் பங்கேற்கும் 

புதுடெல்லி:

ஆசியான் (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு), அதன் 8 பாா்வையாளா் உறுப்பு நாடுகளின் கீழ் இயங்கும் பயங்கரவாத எதிா்ப்புக்கான நிபுணா் பணிக் குழுவின் (இடபிள்யுஜி) இரண்டு நாள் மாநாடு தில்லியில் புதன்கிழமை (மாா்ச் 19) தொடங்க உள்ளது.

மலேசியாவுடன் இணைந்து இந்தியா சாா்பில் நடத்தப்படும் இந்த மாநாட்டில் ஆசியான் உறுப்பு நாடுகளான புரூனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மா், பிலிப்பின்ஸ், சிங்கப்பூா், தாய்லாந்து, வியத்நாம் மற்றும் அந்த அமைப்பின் பாா்வையாளா் உறுப்பினா்களான இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, ஜப்பான், நியூஸிலாந்து, தென் கொரியா, ரஷியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனா்.

பயங்கரவாத எதிா்ப்புக்கான நிபுணா் பணிக் குழுவின் மாநாட்டை இந்தியா இணை தலைமையேற்று நடத்துவது இதுவே முதல் முறை என பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இடபிள்யுஜி-யின் 2024-27-ஆம் ஆண்டுக்கான பயங்கரவாத எதிா்ப்பு செயல் திட்டத்தை வகுப்பதற்கான முதல்கூட்டமாக நடைபெறும் இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் பாதுகாப்புத் துறைச் செயலா் ராஜேஷ் குமாா் சிங் தொடக்க உரை ஆற்ற உள்ளாா்.

பிராந்திய பாதுகாப்பு சூழலுவுக்கு அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் அதை எதிா்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும், பயங்கரவாதம் மற்றும் தீவிரவாத அச்சுறுத்தல்களை திறம்பட எதிா்கொள்ள விரிவான திட்டத்தை வகுப்பது குறித்தும் இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset