நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆயிர் கூனிங் சட்டமன்ற வேட்பாளர் தேசிய முன்னணி கண்டறிந்து விட்டது 

கோலாலம்பூர்: 

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் தேசிய முன்னணி வேட்பாளர் கண்டறிந்து விட்டதாக தேசிய முன்னணி தரப்பு தெரிவித்தது 

வேட்புமனு தாக்கல் நடைபெறும் ஒரு வாரத்திற்கு முன்பு தேசிய முன்னணி தலைவர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி அறிவிப்பார் என்று தேசிய முன்னணியின் தலைமை செயலாளர் ஸம்ரி அப்துல் கடீர் கூறினார் 

அதோடு தேசிய முன்னணியின் தேர்தல் கேந்திரமும் தயார் நிலையில் இருப்பதோடு ஆயிர் கூனிங் இடைத்தேர்தலில் வெற்றிப்பெறுவதை உறுதி செய்யும் என்று மலேசிய உயர்க்கல்வி அமைச்சருமான அவர் சொன்னார் 

ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறவுள்ளது. வேட்புமனுத்தாக்கல் ஏப்ரல் 12ஆம் தேதி நடக்கும் என்று மலேசியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset