
செய்திகள் மலேசியா
எம்ஏசிசி தலைமையகத்தில் 6.5 மணி நேர விசாரணைக்கு பிறகு வெளியேறிய இஸ்மாயில் சப்ரி
புத்ராஜெயா
முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப், இன்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) தலைமையகத்தில் 6.5 மணி நேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின்னர் மாலை 4.30 மணிக்கு வெளியேறினார்.
பெரா நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் சப்ரி, காலை 9.52 மணிக்கு தலைமையகத்திற்கு வருகை தந்து, வெளியேறும்போது அவரது வாகனத்திலிருந்து கண்ணாடியை இறக்காமல் செய்தியாளர்களிடம் எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் சென்றார்.
“விசாரணை இன்னும் முடிவடையவில்லை. முன்னாள் பிரதமரின் மேலும் சில விளக்கங்கள் தேவைப்படுகின்றன,” என எம்ஏசிசி வட்டாரம் கூறியது.
நாளை காலை 10 மணிக்கு மீண்டும் எம்ஏசிசி தலைமையகத்திற்கு ஐந்தாவது நாளாக விசாரணைக்கு வருமாறு இஸ்மாயில் சப்ரி அழைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் அம்னோ துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி, நான்கு முன்னாள் முக்கிய அதிகாரிகள் தொடர்பான ஊழல் மற்றும் பண மோசடி வழக்கில் சந்தேகநபராக விசாரணை செய்யப்படுகிறார்.
170 மில்லியம் மோசடி
இதற்கு முன், எம்ஏசிசி வெளியிட்ட தகவலில், நான்கு அதிகாரிகளின் வீடுகள் மற்றும் “பாதுகாப்பு வீடுகள்” என கருதப்படும் மூன்று இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில், RM170 மில்லியன் ரொக்கம் மற்றும் 16 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தது.
- தயாளன் சண்முகம்
தொடர்புடைய செய்திகள்
March 17, 2025, 11:50 pm
சிறந்த முதலாளிகளை அங்கீகரிக்கவே எச்ஆர்டி கோர்ப்பின் பென் திட்டம் அறிமுகம்: ஸ்டீவன் சிம்
March 17, 2025, 11:46 pm
இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை மேலோங்கச் செய்வது அவசியம்: கோபிந்த் சிங்
March 17, 2025, 4:51 pm
பயிற்சி மருத்துவர்களுக்கான பணியமைப்பு ஒத்திவைப்பு
March 17, 2025, 4:21 pm
பிரதமர் பதவி இரு தவணைக்காலம் எனும் பரிந்துரையை கலந்தாலோசிக்கலாம்; ஆனாலும் நிபந்தனைகள் வேண்டும்
March 17, 2025, 3:56 pm