நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பயிற்சி மருத்துவர்களுக்கான பணியமைப்பு ஒத்திவைப்பு

பெட்டாலிங் ஜெயா: 

மார்ச் 25 முதல் 27ஆம் தேதி வரை நடைபெறவிருந்த பயிற்சி மருத்துவர்கள் (housemen) பணியமைப்பு (placement) தேர்வு, ePlacement எனப்படும் முறைமையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதலில் விண்ணப்பித்தவர்களுக்கு முன்னுரிமை” என்ற முறையில் செயல்பட்டு வந்த ePlacement , “நேர்மையான, சமமான மற்றும் திறமை அடிப்படையிலான புதிய முறையில்” மாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளது.

“புதிய முறையை உருவாக்கி, சோதனை முடிந்தவுடன், 6 முதல் 8 வாரங்களுக்குள் விண்ணப்பங்களை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளோம்,” என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

19 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனாளர்கள் பிப்ரவரி 27 அன்று ePlacement இணையதளத்தை அணுகியதால், தரவுத்தளம் செயலிழந்து, பெரும் கோளாறு ஏற்பட்டதாகவும், இதுவே அந்தத் தேதியில் நடத்தவிருந்த பணியமைப்பு தேர்வை ஒத்திவைக்க முக்கிய காரணமாக அமைந்ததாகவும் தெரிவித்துள்ளது.

“பிப்ரவரி 27 தேதியில் ஒப்புதலுக்கான இடங்கள், ஒதுக்கீட்டை மீறிய நிலையில், சபா மற்றும் சரவாக் மாநிலங்களில் 1% கூட இடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால், கிடைத்த தரவுகள் பயன்படாத நிலையில் முடிவடைந்தது,”* என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“இவ்விடையூறுகளை சரிசெய்வதற்காக, ePlacement முறைமையின் கட்டமைப்பிலும் செயல்முறையிலும் பல மேம்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால், பலமுறை சோதனைகள் நடத்தியபோதிலும், இப்பணியமைப்பு முறையை அனைவருக்கும் சமமாக வழங்க முடியவில்லை,” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்று நடக்கவிருந்த 2,245 பயிற்சி மருத்துவர்களுக்கான பணியமைப்பும், அளவுக்கு அதிகமான விண்ணப்பங்கள் காரணமாக, தீவிர தொழில்நுட்பத் தடங்கல் ஏற்பட்டதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் கடும் விமர்சனம்

இதற்கிடையில், கோத்தா மலாக்கா நாடாளுமன்ற உறுப்பினர் கூ போய் தியோங், ePlacement முறையில் ஏற்பட்ட தடைகளை கடுமையாக விமர்சித்தார்.

“சுகாதார அமைச்சகம் தனது செயல்பாடுகளில் தெளிவற்ற நிலைமை உருவாக்கியுள்ளது. இப்பணியமைப்பு முறையின் எதிர்காலம் குறித்து ஏற்படும் அனுமானங்கள், பயிற்சி மருத்துவர்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது,” என்று அவர் கண்டனம் தெரிவித்தார்.

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset