
செய்திகள் மலேசியா
தொழில் துறை முதலாளிகளுக்கு பெரும் பயனயளிக்கும் எச்ஆர்டி கோர்ப்பின் பென் திட்டம் ஜூன் 1ஆம் தேதி அமலுக்கு வரும்: டத்தோ வீரா ஷாகுல்
கோலாலம்பூர்:
தொழில் துறை முதலாளிகளுக்கு பெரும் பயனயளிக்கும் எச்ஆர்டி கோர்ப்பின் பென் திட்டம் ஜூன் 1ஆம் தேதி அமலுக்கு வரும்.
எச்ஆர்டி கோர்ப் தலைமை இயக்குநர் டத்தோ வீரா ஷாகுல் தாவூத் இதனை கூறினார்.
மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் எச்ஆர்டி கோர்ப் இன்று பிரிமியர் எம்ப்ளாயர் நெட்வொர்க் (PEN) எனும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
நாட்டின் முன்னணி முதலாளிகளுக்கு பிரத்தியேக சலுகைகள், சிறப்பு பயன்களை அடிப்படையாக கொண்டு இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முதன்மையான முதலாளிகளுக்கு அதிக பயிற்சிகள், மேலாண்மை தீர்வுகள், பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்க வடிவமைக்கப்பட்ட ஒரு பிரத்தியேக திட்டம் இதுவாகும்.
முதலாளிகளுடனான ஒத்துழைப்பின் வாயிலாக பணியாளர்களின் திறன் மேம்பாட்டை வலுப்படுத்துவதிலும், தொழில்துறை ஈடுபாட்டை தீவிரப்படுத்துவதிலும் கவனம் செலுத்தப்படும்.
இதன் வாயிலாக மனிதவள அமைச்சின் முதன்மை இலக்குகளை இந்த பென் திட்டம் முழுமையாக முன்னெடுக்கிறது என்று அவர் கூறினார்.
இத்திட்டத்தின் முதலாளிகள் எச்ஆர்டி கோர்ப்பின் கற்றல், மேம்பாட்டு நிபுணர்கள் குழுவை அணுகுவதற்கான சிறப்பு வாய்ப்பைப் பெறுவார்கள்.
மேலும் எளிமையான செயல்முறைகள், முன்னுரிமை அளிக்கப்பட்ட சேவைகளையும் பெறுவார்கள்.
புதிய யுத்திகளை வழங்குவதன் மூலம் மனித மூலதன மேம்பாட்டை சீரமைப்பதற்கான எச்ஆர்டி கோர்ப்பின் தொடர்ச்சியான நிலைப்பாட்டை இது உறுதி செய்கிறது.
வணிகங்களை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட திறமையான செயல்முறைகள் வாயிலாக முதலாளிகள் தொடர்ந்து வளர்ந்து வருவதை எச்ஆர்டி கோர்ப் உறுதி செய்கிறது.
எச்ஆர்டி கோர்ப்பின் இந்த பென் திட்டம் வரும் ஜூன் 1ஆம் தேதி முழுமையாக அமலுக்கு வரும்.
அதே வேளையில் முதலாளிகள் எளிமையான மானியக் கொள்கை, தொழில் திறன் மேம்பாட்டு நிதி உட்பட 6 சிறப்பு சலுகைகளை பெறுவார்கள்.
தலைநகரில் நடைபெற்ற எச்ஆர்டி கோர்ப் பென் திட்ட அறிமுக விழாவில் டத்தோ வீரா ஷாகுல் தாவூத் இதனை கூறினார்.
மனிதவள அமைச்சின் தலைமை செயலாளர் டத்தோ அஸ்மான் முகமத் யூசுப், எச்ஆர்டி கோர்ப் வாரியக் குழு தலைவர் டத்தோ ஹுராய்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 18, 2025, 10:23 am
ஹோட்டலில் காதலனுடன் தனியாக இருந்த அடுத்தவரின் மனைவி பிடிபட்டார்
March 18, 2025, 10:22 am
ஜசெக தேர்தல் முடிவுகளுக்கும் அமைச்சரவைப் பதவிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: அந்தோனி லோக்
March 18, 2025, 10:21 am
வடக்கு சுமத்ராவில் நிலநடுக்கம்: மலேசியாவிலும் உணரப்பட்டது
March 18, 2025, 10:20 am
ஐஜிபி டான்ஶ்ரீ ரசாருடினின் இடைத்தை நிரப்ப அயோப் கான் முதன்மை தேர்வாக உள்ளார்
March 18, 2025, 10:18 am
இஸ்மாயில் சப்ரி வழக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் எம்ஏசிசி விசாரிக்கும்: அசாம் பாக்கி
March 18, 2025, 10:17 am
பிரதமரின் பதவிக் கால வரம்பை இன அரசியலுக்கான பொருளாக மாற்ற வேண்டாம்: பிரதமர்
March 17, 2025, 11:50 pm
சிறந்த முதலாளிகளை அங்கீகரிக்கவே எச்ஆர்டி கோர்ப்பின் பென் திட்டம் அறிமுகம்: ஸ்டீவன் சிம்
March 17, 2025, 11:46 pm