செய்திகள் மலேசியா
கல்லுமலை தைப்பூச வசூல் 619,241 ரிங்கிட்; ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் 1 இலட்சம் ரிங்கிட் நிதியுதவி வழங்குவதாக வாக்குறுதி: சீதாராமன்
ஈப்போ:
கடந்த மாதம் ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவின் ஏற்பாட்டில் இங்குள்ள கல்லுமலை ஆலயத்தில் தைப்பூச திருவிழா சிறப்பாக நடந்தேறியது. இந்த தைப்பூச திருவிழாவின் வசூல் 619,241.00 ரிங்கிட் என்று ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவின் தலைவர் இரா.சீதா இராமன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அதுமட்டுமின்றி, இந்த தைப்பூச திருவிழாவில் சிறப்பு பிரமுகராக கலந்துகொண்ட பேராக் மாநில இந்திய சமூகநலத்துறை, சுகாதாரம், மனிதவள ஒற்றுமைத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன், 1 இலட்சம் ரிங்கிட் மானியத்தை பேராக் மாநில அரசு வழங்குவதாக வாக்குறுதி அளித்ததாக அவர் குறிப்பிட்டார்.
இவ்வேளையில் இந்த தைப்பூச திருவிழா சிறப்பாக நடைப்பெற உதவிய பேராக் மாநில அரசாங்கம், போலீஸ் தரப்பினர், தீயணைப்பு பாதுகாப்பு படையினர், ரேலா பாதுகாப்பு படையினர், சீருடை பணியாளர்கள் ஆகிய அனைவருக்கும் ஆலயம் சார்பில் அவர் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
இவ்வாண்டு தைப்பூச வசூல் கடந்தாண்டைவிட சுமார் 50 ஆயிரம் ரிங்கிட் அதிகமாகும். இந்த நிதியைக் கொண்டு மேலும் அதிகமான வசதிகளை பக்தர்களுக்கு செய்து தரப்படும்.
இதனால் இறைவழி செய்ய வரும் பக்தர்கள் நெரிசலிலிருந்து தவிர்க்க அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அவர் கூறினார்.
இவ்வாண்டு தைப்பூசத்தில் பல வகையில் உதவிகள் வழங்கிய நல்லுள்ளம் கொண்ட நன்கொடையாளர்கள், பல உதவிகள் வழங்கியதோடு சுற்றுச்சூழலை துப்புரவு செய்து தூய்மையாக வைத்துக்கொண்ட ஈப்போ மாநகர் மன்றத்திற்கும் தன்னார்வலராக சேவையாற்றி ஈப்போ போலிதெக்னிக் உங்கு ஓமர் விரிவுரையாளர்கள், மாணவர்கள், இதர உயர்கல்விகூட மாணவர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் தலைவர் இரா.சீதா இராமன் ஆலய சார்பில் தம் நன்றியை பதிவு செய்தார்.
- ஆர். பாலச்சந்தர்
தொடர்புடைய செய்திகள்
January 8, 2026, 10:50 pm
கூடுதல் நிதி வரவேற்கத்தக்கது; தமிழ்ப்பள்ளிகளுக்கு முழுமையாக பயனளிக்க வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
January 8, 2026, 10:48 pm
உண்மை நிரூபிக்கப்பட்டுள்ளது: ஜாஹித்
January 8, 2026, 10:47 pm
ஜாஹித் ஹமிடி மீதான 47 குற்றச்சாட்டுகள் தொடர்பில் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது: ஏஜிசி
January 8, 2026, 1:10 pm
பத்துமலை பொது சொத்து, தனிநபருக்கு சொந்தமானது அல்ல; அவதூறுகளை பரப்ப வேண்டாம்: டான்ஸ்ரீ நடராஜா
January 8, 2026, 12:56 pm
மலேசியா பொது போக்குவரத்தில் புதிய எழுச்சி: பயணிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்வு
January 8, 2026, 11:48 am
நெகிரி செம்பிலான் குடிநுழைவுத் துறையின் அதிரடி சோதனை: 77 வெளிநாட்டவர்கள் கைது
January 8, 2026, 11:26 am
