நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஒருவரைப் புரிந்து கொள்வதற்கு மொழி ஒரு தடையாக இருக்கக்கூடாது: சமூக ஊடகத்தில் கவனத்தை ஈர்க்கும் காட்பேரி நிறுவனத்தின் சாக்லெட் விளம்பரம்

புது டெல்லி:

இந்தியாவில் காட்பரி நிறுவனத்தின் சாக்லெட் விளம்பரம் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பல்வேறு மொழிகளை உள்ளடக்கும் சமூகத்தைப் பற்றி அது எளிமையாக எடுத்துரைப்பதாக அவர்கள் தெரிவித்தனர். 

அவ்விளம்பரக் காணொலியில் சென்னையைச் சேர்ந்த பெண்மணி வட இந்தியாவுக்குச் செல்கிறார்.

ஹிந்தி மொழி அவ்வளவாகத் தெரியாத அவர் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் பேசுவதற்குச் சிரமப்படுகிறார்.

அதைக் கண்ட ஒருவர் ஆங்கிலத்தில் பேசத் தொடங்குகிறார்.

ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாது என்றாலும் அவர் தமக்குத் தெரிந்த சில வார்த்தைகளைக் கொண்டு உரையாடல் நடத்துகிறார்.

வட இந்தியாவைச் சேர்ந்த அவரும் சென்னையிலிருந்து வந்த பெண்ணும் பின்னர் சாக்லெட்டைப் பகிர்ந்துகொள்கின்றனர்.

எந்த மொழியைப் பேசினால் என்ன, ஒருவரைப் புரிந்துகொள்வதற்கு மொழி ஒரு தடையாக இருக்கக்கூடாது என்று விளம்பரம் காட்டுகிறது என்று அவர்கள் கூறினர்.

இந்த விளம்பரத்தை யார் செய்தது? தயவுசெய்து அவருடைய சம்பளத்தை உயர்த்துங்கள் என்று சிலர் பதிவிட்டனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset