
செய்திகள் இந்தியா
வட மாநிலங்களில் ஹோலி – ரமலான் ஜூம்ஆ தொழுகை அமைதியாக நடந்து முடிந்தது
புதுடெல்லி:
64 ஆண்டுகளுக்கு பின் ஒரே நாளில் ஹோலி பண்டிகை, வெள்ளிக்கிழமை தொழுகை பலத்த பாதுகாப்புடன் நடந்தது. நாடு முழுவதும் ஹோலி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.
ஹோலி பண்டிகை நாளான நேற்று வெள்ளிக்கிழமை தொழுகையும் வந்ததால், வடமாநிலங்களில் பரபரப்பு ஏற்பட்டது. ஹோலியும், ரமலான் நோன்பின் வெள்ளிக்கிழமை தொழுகையும் ஒரே நாளில் கடந்த 64 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. தற்போது மீண்டும் ஒரே நாளில் வந்ததால், சிறுபான்மையினர் மக்கள் வாழும் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.
ஹோலி மற்றும் வெள்ளிக்கிழமை தொழுகை தொடர்பாக இரு சமூக மக்களும் சகோதரத்துவ சூழலைப் பேண வேண்டும் என்று இரு சமூக தலைவர்களும் வேண்டுகோள் விடுத்து இருந்தனர். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஹோலி கொண்டாட்டம் நேற்று அமைதியாக நடந்து முடிந்தது. அதே போல் ரமலான் மாதத்தை முன்னிட்டு வந்த வெள்ளிக்கிழமை தொழுகையும் அமைதியாக முடிந்தது. உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் பாரம்பரிய ஹோலி ஊர்வலம் நடந்தது.
அங்கு முகலாயர் காலத்து ஷாஹி ஜமா மசூதியிலும் தொழுகைக்காக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஷாஜஹான்பூரில், ஊர்வலத்தின் போது சில இடங்களில் கல்வீச்சு நடந்தது. அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர்.
டெல்லியில் 25,000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு இருந்தனர். சிசிடிவி கேமராக்கள், டிரோன்கள் மூலம் சுமார் 300 முக்கியமான பகுதிகளை போலீசார் உன்னிப்பாகக் கண்காணித்தனர். மேற்குவங்கம், அரியானா, பஞ்சாப், அசாம், மணிப்பூர், ராஜஸ்தான், தெலங்கானா, ஆந்திரா, காஷ்மீர், பீகார், மபி உள்ளிட்ட மாநிலங்களிலும் ஹோலி உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 29, 2025, 12:25 pm
சர்க்கரை விலையைக் கட்டுப்படுத்த புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது ஒன்றிய அரசு
March 28, 2025, 2:42 pm
ரமலான் ஈத் பண்டிகை அன்று, சம்பல் சாலைகளில் தொழுகை நடத்த அனுமதி இல்லை: ஏஎஸ்பி அறிவிப்பு
March 21, 2025, 12:06 pm
சட்டீஸ்கரில் 30 நக்சல்கள் சுட்டுக்கொலை
March 15, 2025, 10:42 am
ஹோலி பண்டிகையில் கஞ்சா ஐஸ்கிரீம் விற்பனை
March 14, 2025, 1:50 pm