
செய்திகள் விளையாட்டு
விளையாட்டாளரின் நேர்மையை எண்ணிப் பெருமைப்படுகிறேன்: அமோரிம்
லண்டன்:
ஐரோப்பா லீக் கால்பந்துப் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றின் ஆட்டத்தில் ஸ்பெயினின் ரியால் சோசியடாட்டை 4-1 எனும் கோல் கணக்கில் வென்றுள்ளது மென்செஸ்டர் யுனைடெட்.
இச்சுற்றில் இரு குழுக்களும் இருமுறை மோதின. 5-2 எனும் மொத்த கோல் எண்ணிக்கையில் மென்செஸ்டர் யுனைடெட் வென்றது.
இந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட்டுக்கு இரண்டு பெனால்டி வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அவை இரண்டையும் பெர்னாண்டஸ் கோலாக்கினார்.
மென்செஸ்டர் யுனைடெட்டுக்கு மூன்றாவது முறையும் பெனால்டி வழங்கப்பட்டது.
ஆனால் காணொளிவழிச் செயல்படும் துணை நடுவரை (VAR) நாடாமல் யுனைடெட் வீரர் பேட்ரிக் டொர்கு கூறியதைக் கேட்டுக்கொண்டு நடுவர் முடிவை மாற்றிக் கொண்டார்.
தனது குழுவுக்கு பெனால்டி வழங்கப்படக்கூடாது என்ற தனது கருத்தை டொர்கு தொடர்ந்து எடுத்துரைத்தார்.
அது சரியான செயல். அவரை எண்ணிப் பெருமைப்படுகிறேன். அதேநேரம், அவ்வேளையில் ஆட்டத்தில் கோலின்றி இருந்திருந்தாலோ நாங்கள் தோற்றுக் கொண்டிருந்தாலோ எனது கருத்தில் மாற்றம் இருந்திருக்காது என்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அமோரிம் பதிலளித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 17, 2025, 10:27 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
March 17, 2025, 10:26 am
70 ஆண்டுகளுக்குப் பின் கிண்ணத்தை வென்று சாதித்தது நியூகாஸ்டல்
March 16, 2025, 7:20 pm
கராபாவ் கிண்ண இறுதியாட்டம்: லிவர்புல்- நியூகாஸ்டல் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை
March 16, 2025, 6:17 pm
அதிக வருமானம் ஈட்டும் கிரிக்கெட் கிளப்களின் பட்டியல்
March 16, 2025, 2:27 pm
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
March 16, 2025, 2:25 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி சமநிலை
March 15, 2025, 11:15 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
March 14, 2025, 10:40 am
ஐரோப்பா லீக்: ஏஎஸ் ரோமா தோல்வி
March 14, 2025, 10:37 am