
செய்திகள் இந்தியா
டெல்லியில் பிரிட்டன் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: 2 பேர் கைது
புது டெல்லி:
டெல்லி தங்குவிடுதி ஒன்றில் பிரிட்டன் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரிட்டனைச் சேர்ந்த அந்தப் பெண் ஒரு மாதத்துக்கு முன்பு இந்தியா வந்துள்ளார். முதலில் மகாராஷ்டிராவில் தங்கியிருந்த அவர், சில தினங்களுக்கு முன்பு கோவாவுக்கு சென்றுள்ளார்.
கடந்த செவ்வாக்கிழமை இரவு டெல்லிக்கு சென்றுள்ளார். மஹிபால்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்த அவருக்கு தூய்மைப் பணியாளர் லிப்டில் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
பின்னர் அந்தப் பெண்ணை கைலாஷ் (24) என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து அந்தப் பெண் காவல் துறையில் புகார் செய்துள்ளார்.
இதுகுறித்து தென்மேற்கு டெல்லி காவல் துணை ஆணையர் சுரேந்திர சவுத்ரி கூறும்போது, “பிரிட்டன் பெண் பாலியல் வன்கொடுமை தொடர்பாக 2 தனித்தனி வழக்குகள் பதிவு செய்து 2 பேரை கைது செய்துள்ளோம். இவர்கள் இருவருக்கும் தொடர்பு இல்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில், கைலாஷ் என்பவர் அந்தப் பெண்ணுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி உள்ளார். இந்நிலையில், நட்பை துண்டித்துக் கொண்ட கைலாஷை சந்திப்பதற்காக அந்தப் பெண் டெல்லி வந்துள்ளார். இந்த நிலையில்தான் கைலாஷ் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அவருடைய செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறோம். அங்கிருந்த சிசிடிவி கேமராவையும் ஆய்வு செய்து வருகிறோம்.
இந்த சம்பவம் தொடர்பாக பிரிட்டன் தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2025, 3:38 pm
சுற்றுப்பயணிகளிடம் மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகளே இல்லை: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா
April 28, 2025, 4:24 pm
அதிகரித்துவரும் சிசேரியன் அறுவை சிகிச்சைகள்
April 28, 2025, 8:40 am
பெங்களூரு செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு
April 27, 2025, 10:01 pm
நோயாளிகள் உட்பட கண்ணீருடன் விடைபெற்று நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்
April 25, 2025, 12:07 am
பயங்கரவாதிகளை உலகத்தின் ஓரத்துக்கே விரட்டுவோம்: இந்தியப் பிரதமர் மோடி
April 25, 2025, 12:05 am
சிந்து நீர் தடை நடவடிக்கை கோழைத்தனமானது: இந்திய விமானம், வர்த்தகத்துக்கு பாகிஸ்தான் தடை
April 24, 2025, 6:11 pm
காஷ்மீர் தாக்குதல்: விமான டிக்கெட்டுகளின் விலை மூன்று மடங்கு அதிகரித்தது
April 24, 2025, 2:27 pm