
செய்திகள் மலேசியா
குற்றப் பின்னணியை கொண்ட 3 அந்நிய நாட்டினர் சிப்பாங்கில் சுட்டுக் கொல்லப்பட்டனர்
சிப்பாங்:
குற்றப் பின்னணியை கொண்ட 3 அந்நிய நாட்டினர் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை துணை இயக்குநர் ஃபாடில் மார்சஸ் கூறினார்.
வன்முறை, ஆபத்தான குற்றங்களுடன் தொடர்புள்ள அம் மூவரும் இன்று அதிகாலை சிப்பாங்கின் டேசா விஸ்டாவில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் 35 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களாவர்.
இந்த மூன்று பேரும் கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து சிலாங்கூர், நெகிரி செம்பிலான், கோலாலம்பூரைச் சுற்றி 17 கொள்ளைகள், வீடு புகுந்து கொள்ளை சம்பவங்களில் தீவிரமாக ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
சந்தேக நபர்கள் அனைவரும் டேசா விஸ்டாவில் உள்ள ஒரு வீட்டைக் கொள்ளையடிக்க முயற்சித்தனர்.
அதன் பின்னர் காட்டுப் பகுதியில் மறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தக் கும்பலால் குறிவைக்கப்பட்ட ஒரு வீட்டின் பாதுகாப்பு அலாரம் ஒலித்தது.
அப்போது முகமூடி அணிந்த ஒரு நபர் கத்தியுடன் ஆயுதம் ஏந்தியிருப்பதை உரிமையாளர் கண்டார். இதனால் அவர்கள் அருகிலுள்ள காட்டுப் பகுதியில் ஒளிந்து கொண்டனர்.
வீட்டு உரிமையாளர் உடனடியாக காவல்துறையைத் தொடர்பு கொண்டார்.
சந்தேக நபர்களை கண்டுபிடிப்பதற்காக குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அப்போது சந்தேக நபர்கள் ஒரு அரிவாளால் போலிசாரைத் தாக்க முயன்றனர்.
எனவே, போலிசார் தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும்,
மூன்று சந்தேக நபர்கள் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 14, 2025, 5:49 pm
அமைதியான ஒன்றுக்கூடலுக்கு அழைப்பு விடுப்பது தவறல்ல: அருண் துரைச்சாமி
March 14, 2025, 4:32 pm
பொது மருத்துவர்களுக்கான கூடுதல் கட்டணத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது: சுகாதார அமைச்சர்
March 14, 2025, 4:24 pm
பல்வேறு துறைகளில் 60,000 பொறியியலாளர்களை உருவாக்கும் திறனை மலேசியா கொண்டுள்ளது: ஜாஹித்
March 14, 2025, 1:02 pm
நோன்பு பெருநாளை முன்னிட்டு மலாக்கா மாநில அரசு RM400,000 ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது: ராவூப் யூசோ
March 14, 2025, 12:30 pm
தற்காப்பு மீட்புப் படை பெண் வீராங்கனைகள்: 4 மீட்டர் நீளமான ராஜநாகத்தை வெற்றிகரமாக பிடித்தனர்
March 14, 2025, 12:29 pm