நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிளாந்தான் பள்ளிவாசலில் இந்தியர், சீனர் மற்றும் இஸ்லாமியர்கள் இணைந்து நோன்பு திறந்தனர்

கோலாலம்பூர்:

கிளாந்தான் பள்ளிவாசலில் இந்தியர்களும் சீனர்களும் இஸ்லாமியர்களோடு இணைந்து நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காணொலி சமூக ஊடகத்தில் பொது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

@miszzhanafirmien என்ற டிக் டாக் கணக்கில் பதிவிடப்பட்ட அக்காணொலியில் கிளந்தான்,கோத்தா பாருவில் அமைந்துள்ள Masjid Jamek Muhammadi  பள்ளிவாசலில் இஸ்லாமியிரகளின் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் இந்தியர்களும் சீனர்களும் தங்களின் குடும்ப உறுப்பினர்கள் அமர்ந்து உணவருந்தியது காட்டப்பட்டுள்ளது. 

ரமலான் மாதத்தில், அனைத்துப் பின்னணியிலிருந்தும் மக்கள் நோன்பு திறக்க ஒன்று கூடி, இந்த சிறப்பு தருணத்தை ஒற்றுமையுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.

இது தான் மலேசிய மக்கள் என்றும் அவர்களின் ஒற்றுமையே நாட்டின் பலம் என்றும் பொது மக்கள் அக்காணொலியின் கீழ் கருத்துப் பதிவிட்டுள்ளனர்.

மூவின மக்களும் கிளந்தானில் ஒற்றுமையாக இருப்பதாகும் இங்கு இனவெறிக்கு இடமில்லை என்றும் சமூக ஊடகப் பயனர் பதிவிட்டுள்ளார். 

தோழமை உணர்வு இங்கே கிளந்தானின் வலுவாக உள்ளது என்றும் ஒரு சில கருத்துத் தெரிவித்துள்ளனர். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset