நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கலப்பு அரிசி விவகாரம் தொடர்பில் 308 இடங்களில் சோதனை செய்யப்பட்டு 99 விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டுள்ளது: அர்மிசான்

புத்ராஜெயா:

கலப்பு அரிசி விவகாரம் தொடர்பில் 308 இடங்களில் சோதனை செய்யப்பட்டு 99 விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவின அமைச்சர் அர்மிசான் முகமட் அலி இதனை  தெரிவித்தார்.

உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவின அமைச்சு கலப்பு இறக்குமதி, உள்ளூர் அரிசி பிரச்சினைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் அடிப்படையில் கிட்டத்தட்ட 308 இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இச்சோதனைகளின் வாயிலாக 99 விசாரணை ஆவணங்களும் திறக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் 99 அரிசி டிஆக்ஸிரைபோநியூக்ளிக் அமிலம் மாதிரிகளைப் பெறப்பட்டது.

99 மாதிரிகளில் 17 மாதிரிகள் வேளாண் ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்தின் உயிரி தொழில்நுட்பம்,  நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதாக அர்மிசான் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset