நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விமான நிலையத்தில் நண்பரின் பெட்டியில் வெடிகுண்டு இருப்பதாக நகைச்சுவையாக பேசிய முதியவருக்கு 100 ரிங்கிட் அபராதம்

பாலேக் பூலாவ்:

விமான நிலையத்தில் நண்பரின் பெட்டியில் வெடிகுண்டு இருப்பதாக நகைச்சுவையாக பேசிய முதியவருக்கு  100 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.

பினாங்கு அனைத்துலக  விமான நிலையத்தில் நண்பரின் பெட்டியில் வெடிகுண்டு இருப்பதாக நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.

இது தொடர்பில் கைதான அவர் பொது ஒழுங்கை சீர்குலைத்த குற்றச்சாட்டில் பாலேக் பூலாவில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

குற்றத்தை ஒப்புக்கொண்ட அவருக்கு 100 ரிங்கிட்அபராதம் விதிக்கப்பட்டது.

குற்றச்சாட்டின்படி 64 வயதான இங் கோக் இயோவ் தனது நண்பரின் பெட்டியில் வெடிகுண்டு இருப்பதாக மலேசிய ஏர்லைன்ஸ் ஊழியருக்குத் தெரிந்தே தகவல் அளித்ததாகவும், 

அந்த வார்த்தைகள் பொது ஒழுங்குக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்பதை குற்றம் சாட்டப்பட்டவர் அறிந்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset