நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பல்வேறு துறைகளில் 60,000 பொறியியலாளர்களை உருவாக்கும் திறனை மலேசியா கொண்டுள்ளது: ஜாஹித்

அராவ்:

பல்வேறு துறைகளில் 60,000 பொறியியலாளர்களை உருவாக்கும் திறனை மலேசியா கொண்டுள்ளது.

துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹித் ஹமிடி இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் தொழில்நுட்ப,  தொழிற்கல்வி பயிற்சி திட்டத்தின் வெற்றியின் விளைவாக, 

அனைத்துலக, உள்ளூர் நிறுவனங்களுக்குத் தேவையான பல்வேறு துறைகளில் 60,000 பொறியியலாளர்களை உருவாக்கும் திறனை மலேசியா கொண்டது.

மாணவர்களுக்கு திவேத்  திட்டங்களை வெற்றிகரமாக வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அரசு நிறுவனங்கள் தற்போதுள்ள திறமையான தொழிலாளர்களுக்கு மேம்பாட்டுப் படிப்புகளையும் வழங்கி வருகிறது.


இந்தத் திறன் மேம்பாட்டுப் படிப்பு உள்ளூர் தொழிலாளர்களை மிகவும் திறமையான தொழிலாளர்களாக வெற்றிகரமாக மாற்றியுள்ளது.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அவர்களுக்கு லாபகரமான சம்பளம் வழங்கப்படும் அளவிற்கு இது வெற்றிகரமாக அமைந்துள்ளது என்றும் அவர் விளக்கினார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset