நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமைதியான ஒன்றுக்கூடலுக்கு அழைப்பு விடுப்பது தவறல்ல: அருண் துரைச்சாமி

 கோலாலம்பூர்: 

மத போதக பேச்சாளர் ஜம்ரி வினோத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடத்த     சமூக ஊடகத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, அழைப்பு விடுத்ததற்காக, அருண் துரைச்சாமி இன்று மாலை புக்கிட் அமான் காவல் நிலையத்தில் விளக்கம் அளித்தார்

பின்னர் காவல் நிலைய தலைமையகத்தின் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அருண் துரைசாமி, சட்ட அமலாக்கத்தில் உள்ள குறைபாடுகளைப் பற்றி பேசுவதற்கும், அமைதியான கூடுதலுக்கு அழைப்பு விடுப்பதற்கும் தனக்கு அரசியலமைப்பு உரிமை உள்ளதாகக் கூறினார்.

“சட்ட அமலாக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், எங்களுக்கு போராட்டம் நடத்த உரிமை உள்ளது.

“அது அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்ட எனது உரிமையாகும். 2012 ஆம் ஆண்டு அமைதியான கூடுதல் சட்டத்தின்படி இது கலகத்தைத் தூண்டுவதாகாது,” என்று அவர் கூறினார்.

அந்த வீடியோவை வெளியிட்டதற்கு வருத்தம் இல்லை என்றும், இந்துக்களின் விரக்தியை வெளிப்படுத்தவே அது பதிவிடப்பட்டதாகவும் அருண் துரைச்சாமி தெரிவித்தார்.

இந்து காவடி முறையை ஏளனம் செய்த ஜம்ரியின் கூற்றுக்கு எதிராக இம்மாத இறுதிக்குள் குற்றவியல் வழக்கு தொடரவும், இது குறித்து பேரரசரை சந்திக்க கோரிக்கை விடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset