
செய்திகள் மலேசியா
நோன்பு பெருநாளை முன்னிட்டு மலாக்கா மாநில அரசு RM400,000 ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது: ராவூப் யூசோ
அலோர் காஜா:
மலாக்கா மாநில அரசு ஆறு நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் நோன்பு பெருநாளை முன்னிட்டு RM400,000 ரிங்கிட் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் Datuk Seri Ab Rauf Yusoh தெரிவித்தார்.
பெருநாள் கொண்டாட்டத்தின் போது வசதி குறைந்த மக்களின் நிதிச் சுமையைக் குறைக்க இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நிதி கட்டம் கட்டமாக வழங்கப்படும் என்றார் அவர்.
மேலும், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், தனித்து வாழும் தாய்மார்கள், வசதி குறைந்தவர்கள் என மொத்தம் 2,000 பேர் இந்தச் சிறப்பு நிதி உதவியால் பயனடைவார்கள் என்று Ab Rauf Yusoh குறிப்பிட்டார்.
மலாக்கா அரசாங்கம் மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிப்பதிலும், அவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்வதிலும் உறுதியாக உள்ளது என்று மஸ்ஜிட் தானா நாடாளுமன்றத் தொகுதிக்கான நோன்பு பெருநாள் உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் அவர் இவ்வாறு கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
March 14, 2025, 5:49 pm
அமைதியான ஒன்றுக்கூடலுக்கு அழைப்பு விடுப்பது தவறல்ல: அருண் துரைச்சாமி
March 14, 2025, 4:32 pm
பொது மருத்துவர்களுக்கான கூடுதல் கட்டணத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது: சுகாதார அமைச்சர்
March 14, 2025, 4:24 pm
பல்வேறு துறைகளில் 60,000 பொறியியலாளர்களை உருவாக்கும் திறனை மலேசியா கொண்டுள்ளது: ஜாஹித்
March 14, 2025, 12:30 pm
தற்காப்பு மீட்புப் படை பெண் வீராங்கனைகள்: 4 மீட்டர் நீளமான ராஜநாகத்தை வெற்றிகரமாக பிடித்தனர்
March 14, 2025, 12:29 pm