நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆயார் கூனிங் இடைத் தேர்தலில் வாக்காளர்களை கவர வேறுபட்ட அணுகுமுறையை தாப்பா தேசிய முன்னணி பயன்படுத்தும்: டத்தோஸ்ரீ சரவணன்

தாப்பா:

ஆயார் கூனிங் இடைத் தேர்தலில் வாக்காளர்களை கவர வேறுபட்ட அணுகுமுறையை தாப்பா தேசிய முன்னணி பயன்படுத்தும் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் ஏப்ரலில் நடைபெறவுள்ளது.

இந்த இடைத்தேர்தலில் வாக்காளர்களை ஈர்க்க தாப்பா தேசிய முன்னணி வேறுபட்ட அணுகுமுறையைப் பயன்படுத்தும்.

கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளரின் வெற்றியை உறுதிசெய்வதற்காக தேர்தல் கேந்திரம் உள்ளூர் மாதிரியின்படி பிரச்சாரத்தை மேற்கொள்ளும்.

தாப்பாவில் ஏற்படும் தேவைகள், பிரச்சினைகளை இங்குள்ள தேர்தல் கேந்திரங்கள் உண்மையில் புரிந்து வைத்துள்ளன.

மேலும் இந்த தனித்துவமான அணுகுமுறையால் தேசிய முன்னணி பல்வேறு இனங்களிலிருந்து பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க உதவியுள்ளது.

இதன் அடிப்படையில் இடைத்தேர்தலில் ஆயிர் கூனிங் தொகுதியை தேசிய முன்னணி தக்க வைத்துக் கொள்ளும்.

இகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ சரவணன் நம்பிக்கையுடன் இதனை கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset