நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தற்காப்பு மீட்புப் படை பெண் வீராங்கனைகள்: 4 மீட்டர் நீளமான ராஜநாகத்தை வெற்றிகரமாக பிடித்தனர்

பாலிங்:

பெகான் புலாய்  ஜாலான் கம்புங் பயாவிலுள்ள ஒரு வீட்டில் புகுந்த நான்கு மீட்டர் நீளமும் 10 கிலோ எடையுமான ராஜநாகம் (King Cobra) — மலேசிய  தற்காப்பு மீட்புப் படை (APM)*யின் மூன்று பெண் அதிகாரிகளால் 25 நிமிடங்களில் பிடிக்கப்பட்டது.

“இவ்வீட்டில் வசிக்கும் குடும்பத்தினர் நேற்று மாலை 6.40 மணியளவில் நோன்பு திறக்க தயாராகிக் கொண்டிருக்கும் போது, வீட்டு பின்புறத்தில் பாம்பு இருப்பதை கண்டு மதற்காப்பு மீட்புப் படையை தொடர்புக் கொண்டார்கள்" என பாலிங் மாவட்ட தற்காப்பு படை அதிகாரி  மொக்த் பைசோல் அப்துல் அசீஸ் தெரிவித்தார்.

முதலில் கம்பி வேலியில் காணப்பட்ட இந்த நாகம், பின்னர் வீட்டின் பொருட்கள் சேமிக்கும் பகுதியை நோக்கி ஊர்ந்து சென்று அங்கே மறைந்தது.”

அதனைத் தொடர்ந்து, முப்பெரும் வீராங்கனைகள் மிக நுட்பமாக செயல்பட்டு, ஆக்கிரோஷமாக செயல்பட்ட ராஜநாகத்தை மிகவும் குறுகிய இடத்திலிருந்தே பாதுகாப்பாக வெளியே இழுத்து வளைத்தனர்.

தீ விபத்தால் சேதமடைந்த பாலிங் தற்காப்பு படை அலுவலகத்தில், கூடுதலான மீட்பு உபகரணங்கள் இல்லாமல் இருந்த போதிலும், அறிவுடைமை, துணிச்சல், திறமை ஆகியவற்றால் இந்த பெண்கள் அணி எந்தவிதமான விபத்தும் இல்லாமல் பாம்பை சுற்றி பிடித்ததற்காக, மொக்த் பைசோல் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

பிடிக்கப்பட்ட ராஜநாகம்,  மக்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து தொலைதூரம் உள்ள, பாதுகாப்பான இயற்கை சூழலில் விடுவிக்கப்பட்டது என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset