நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் முன்னாள் மாணவர்கள் பிரிவு உதயமானது; மீண்டும் ஒரு கல்வி புரட்சிக்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படும்: சுரேன் கந்தா

பெட்டாலிங்ஜெயா:

ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் முன்னாள் மாணவர்கள் பிரிவு அதிகாரப்பூர்வமாக  உதயமாகியுள்ளது.

இதன் மூலம் நாட்டில்  மீண்டும் ஒரு கல்வி புரட்சிக்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படும் அதன் இணை இயக்குநர் சுரேன் கந்தா கூறினார்.

எங்களின் ஆசான் டான்ஸ்ரீ தம்பிராஜாவின் தூரநோக்கு சிந்தனையின் அடிப்படையில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் தொடங்கப்பட்டது.

கிட்டத்தட்ட 43 ஆண்டுகளாக நாட்டில் மிகப் பெரிய கல்வி புரட்சியை ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் ஏற்படுத்தியுள்ளது.

இதன் மூலம் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தவொரு சூழ்நிலையில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தில் பயின்ற முன்னாள் மாணவர்களை ஒன்றிணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக ஸ்ரீ முருகன் நிலையத்தில் கல்வி பயின்று தற்போது அரசாங்கத்தில் உயர் பதவிகளில் இருப்பர்களை அழைத்து சிறப்பு நிகழ்வு நடத்தப்பட்டது.

இவர்களை கொண்டு ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் முன்னாள் மாணவர்கள் பிரிவு உதயமானது.

இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள முன்னாள் மாணவர்களை ஒன்றிணைக்கும் முயற்சிகள் தொடரும்.

கிட்டத்தட்ட 30 ஆயிரம் முன்னாள் மாணவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்பதே எங்களின் இலக்காகும்.

இதன் மூலம் நாட்டில் மிகப் பெரிய கல்வி புரட்சியை ஏற்படுத்த முடியும் எங்களுக்கு உண்டு.

குறிப்பாக கல்வியால் மட்டுமே இந்திய சமுதாயத்தின் ஏழ்மையை போக்க முடியும் என்று சுரேன் கந்தா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset