நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மூத்த குடிமகனுக்கு ‘பையில் குண்டு’ என்ற கூற்றுக்கு RM100 அபராதம்

பாலிக் புலாவ்
தனது நண்பரின் பையில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறிய 64 வயதான நாக் கோக் யோவ், அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் அவமதிக்கும் நடத்தையில் ஈடுபட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதை அடுத்து RM100 அபராதம் விதிக்கப்பட்டது.

இன்று நீதிபதி சியா ஹூய் டிங் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டவுடன், குற்றம் சுமத்தப்பட்ட நாக் கோக் “சலா” (தவறு) என்று உடனடியாக பதிலளித்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு RM100 அபராதம் விதிக்கப்பட்டது, தவறினால் மூன்று நாள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது

குற்றப்பத்திரிகையின்படி, மார்ச் 11, செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில், பயான் லெபாசில் உள்ள பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தில் மலேசிய ஏர்லைன்ஸ் ஊழியர் ஒருவரிடம், தனது நண்பரின் பையில் வெடிகுண்டு இருப்பதாக நாக் கூறினார்.

இதுபோன்ற வார்த்தைகளை உச்சரிப்பது ஒழுங்கை சீர்குலைக்கும் என்பது தெரிந்தும் அவர் அவ்வாறு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது 1955 சிறு குற்றங்கள் சட்டத்தின் பிரிவு 14-ன் கீழ் தண்டனைக்குரியது. இந்த பிரிவில் உள்ள அதிகபட்ச அபராதமான RM100 அவருக்கு விதிக்கப்பட்டது.

- தயாளன் சண்முகம்


 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset