நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிறந்த தலைமைக்கு போட்டி - பிகேஆர் மகளிர் பிரிவில் பிளவு இல்லை!

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 14–

பிகேஆர் மகளிர் பிரிவின் தலைமைப் பதவிக்கான போட்டியில் தற்போதைய தலைவர் ஃபத்லினா சிடிக்கை எதிர்த்து அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ரொட்ஜியா இஸ்மாயில் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகின்றது.  இப்போட்டி பிரிவினைக்கு வித்திடாது என கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர்.

முன்னதாக “இந்த தேர்தல், எதிர்கால தலைவர்களை கண்டறிந்து வளர்க்கும் மேடையாகும். போட்டியாளர்கள் அனைவரும் நேர்மையான முறையில் போட்டியிட வேண்டும் என மகளிர் பிரிவு துணைத் தலைவர் ஜுவைரியா ஜுல்கிப்லி, வலியுறுத்தினார்.

இந்த தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளரும் தனி திறமைகளையும் ஆற்றலையும் சிறப்பாக வெளிப்படுத்த வேண்டும்,” என்று கூறினார்.

கடந்த கட்சித் தேர்தல் முடிவு

2022 கட்சி தேர்தலில் ஃபத்லினா 18,923 வாக்குகளுடன் வெற்றி பெற்ற நிலையில், ரொட்ஜியா 18,891 வாக்குகளை பெற்றிருந்தார். 32 வாக்குகள் வித்தியாசத்தில் தலைவர் பதவிக்கு தற்போதைய கல்வி அமைச்சர் தேர்தெடுக்கப்பட்டார்.

“புதிய தலைமையை உருவாக்குவதே நோக்கம். வேட்பாளர்கள் மரியாதையுடனும், தரம் மற்றும் ஒழுக்கத்துடனும் பிரச்சாரம் செய்ய வேண்டும். அதிகார நிலைகளை பயன்படுத்தி ஆதரவை திரட்டுவதை தவிர்க்க வேண்டும்,” என மகளிர் பிரிவு செயற்குழு உறுப்பினர் நப்ஸியாஹ் காமிஸ் கூறினார்.

பிளவை ஏற்படுத்தும் தவறான குற்றச்சாட்டுகள், தனிப்பட்ட தாக்குதல்கள், அவதூறு மற்றும் அச்சுறுத்தல்களை தவிர்க்க வேண்டும் என்றும் கட்சி ஆதரவாளர்களிடம் தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மகளிர் பிரிவின் தலைமை தேர்தல் மே மாதத்தில் நடைபெறவுள்ளது.

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset