நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இஸ்மாயில் சப்ரி இரண்டாவது நாளாக வாக்குமூலம் அளிக்க எம்ஏசிசி தலைமையகம் வந்தார்

புத்ராஜெயா:

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி இரண்டாவது நாளாக வாக்குமூலம் அளிக்க எம்ஏசிசி தலைமையகம் வந்தார்.

இரண்டாவது நாளாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்று காலை சுமார் 8.45 மணியளவில் எம்ஏசிசி தலைமையகத்திற்கு அவர் காரில் வந்தார்.

நேற்று இஸ்மாயில் சப்ரியின் வாக்குமூலம் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் பதிவு செய்யப்பட்டது.

 அவர் காலை சுமார் 9.45 மணிக்கு எம்ஏசிசி தலைமையகத்திற்கு வந்து பிற்பகல் 3.15 மணிக்கு வெளியேறினார்.

முன்னதாக பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 170 மில்லியன் ரிங்கிட் ரொக்கமும், மில்லியன் கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள 16 கிலோ தங்கக் கட்டிகளையும் எம்ஏசிசி கைப்பற்றியது.

இது தொடர்பில் அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset