நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காணாமல் போன முதியவர் ஈப்போ ஹோட்டலில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்

ஈப்போ, மார்ச் 14-

கடந்த செவ்வாய்க்கிழமை பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது காணாமல் போனதாக கூறப்பட்ட 62 வயது நபர், நேற்று ஈப்போவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

மாலை 4.20 மணியளவில் ஆர். தினகரனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது என்றார்.

“ஈப்போ ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து அவரது மரணத்தை உறுதிப்படுத்தினர்,” என்று அவர் தெரிவித்தார்.

மரணத்தில் குற்றப் பின்னணி இல்லை

“இறந்தவர் படுக்கையில் படுத்திருந்த நிலையில் காணப்பட்டார், அவரது உடலில் எந்தவித காயங்களும் தென்படவில்லை. குற்றச் செயல் அல்லது சந்தேகத்திற்கிடமான செயல்களின் அறிகுறிகளும் இல்லை.”

இறப்புக்கான காரணத்தை கண்டறிய இன்று உடல்கூறு பரிசோதனை செய்யப்படும். அதோடு இந்த இந்த வழக்கை திடீர் மரணமாக வகைப்படுத்தியுள்ளதாக அபாங் ஜைனல் கூறினார்.

செவ்வாய்க்கிழமை மதியம் தாமான் புலாய் ஹைட்ஸில் உள்ள தமது வீட்டிலிருந்து காரில் புறப்பட்டார், சென்றவர் வீட்டிற்கு திரும்பவில்லை என்று காவல்துறைக்கு புகார்  கிடைத்ததையும் அவர் உறுதிப்படுத்தினார்.

- தயாளன் சண்முகம்
 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset