நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வழக்கு முடிந்த பிறகு தமிழ்ப்பள்ளி கட்டப்படும் என்பதை ஏற்க முடியாது: டத்தோ தினகரன்

நிபோங்தெபால்:

சுங்கை பக்காப் தமிழ்ப்பள்ளி வழங்கு விசாரணை முடிவடைந்த பிறகுதான் கட்டப்படுமென கல்வி அமைச்சர் கூறியதை பினாங்கு மாநில மஇகா தலைவர் டத்தோ ஜெ. தினகரன் சாடியுள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் வாக்கு கேட்க்கும் போது, இதனை வெளிப்படையாக கூறி வாக்கு கேட்டிருக்க வேண்டும். இப்போது தமிழ்ப்பள்ளி விவகாரத்தில் இம்மாதிரியான கருத்துகள் ஏற்புடையது அல்ல என்றும் அவர் கூறினார்.

செனட்டர் டாக்டர் லிங்கேஷ்வரன், நிபோங் தெபால் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட சுங்காய் பக்காப் தமிழ்ப்பள்ளியின் விவகாரத்தை நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் முன்வைத்தார்.

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி கடந்து வந்த பாதை

தேசிய முன்னணி (BN) தலைமையிலான மத்திய அரசின் காலத்தில், RM 3,500,000.00 (3.5 மில்லியன்) பள்ளி கட்டடப் பணிக்காக ஒதுக்கப்பட்டதுடன், RM 500,000.00 வங்கி வட்டி என மேலும் கணக்கிடப்பட்டது. இதற்காக தேவையான நிலமும் அடையாளம் காணப்பட்டது.

ஆனால், பள்ளியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்காமல் சிலர் அரசால் ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக பயன்படுத்தி விட்டதோடு, மேலும் அதிக நிதி கோரி அரசுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் லிங்கேஸ்வரனின் கேள்விக்கு பதில் அளித்த கல்வி அமைச்சர் பாட்லினா சிடிக் இந்த வழக்கு முடிவுக்கு வந்த பிறகு மட்டுமே பள்ளி கட்டடப் பணிகள் கவனிக்கப்படும் என்று கூறினார்.

தீர்வு மட்டுமே தேவை : டத்தோ தினகரன் 

இந்த வழக்கு பல ஆண்டுகள் நீடித்தாலோ? அல்லது தோல்வியடைந்த தரப்பு மேல்முறையீடு செய்தாலோ எந்த காலக்கட்டம் வரை, இப்பகுதி மக்களும் மாணவர்களும் பள்ளிக்காகக் காத்திருக்க வேண்டும்?  டத்தோ தினகரன் தமது அறிக்கையின் வழி கேள்வி எழுப்பியுள்ளார்.

2024 ஆம் ஆண்டு சுங்காய் பக்காப் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலின் போது, இப்பகுதி மக்கள் மற்றும் வாக்காளர்களுக்கு வழக்கு முடிந்த பிறகு மட்டுமே பள்ளி கட்டப்படும் என்பதைக் ஏன் கூறவில்லை என சாடினார்.

கல்வி அமைச்சரின் இந்த பதில் ஏற்க முடியாதது. எனவே, நிபோங் தெபால் நாடாளுமன்ற உறுப்பினர் இந்த பள்ளியை மிக விரைவாக கட்டுவதற்கான தீர்வை அடையாளம் காண வேண்டும். அதோடு எந்த காரணத்திற்கும் இடமளிக்கக் கூடாது என தினகரன் வலியுறுத்தினார்.

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset