நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கேரளாவில் யூடியூப் காணொலி பார்த்து டயட் செய்த இளம் பெண் உயிரிழப்பு

கன்னூர்: 

கேரளாவில் யூடியூப் காணொலி பார்த்து டயட் செய்த ஸ்ரீநந்தா என்ற இளம் பெண் உயிரிழந்துள்ளார். 

உடல் எடையைக் குறைக்க யூடியூப் காணொலிகளைப் பார்த்து அதில் கூறுவது போல் உணவு பழக்கத்தை மாற்றியுள்ளார். 

இவர் கடந்த 6 மாதங்களாக தண்ணீர் உணவுகளையே எடுத்து வந்தார். 

இதனையடுத்து, அவரது உடல் எடை வெகுவாக குறைந்து  திடீர் உடல் நலக்குறைவும் ஏற்பட்டது. 

 அச்சமடைந்த அவரது குடும்பத்தினர், அவரை கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனா். 

இந்த நிலையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீநந்தா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், ஸ்ரீநந்தா தொடர்ந்து உடல் எடையை குறைக்க குறைந்தளவு உணவு சாப்பிட்டு டயட் கன்ட்ரோல் செய்து வந்ததால் குடல் சுறுங்கியதாகவும், அதன் காரணமாக ஸ்ரீநந்தா உயிரிழந்ததாகவும் கூறினா்.  

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset