நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சென்னையில் ஓடுபாதையில் விமானத்தில் தீப்பொறி உருவானது: நூலிழையில் உயிர் தப்பிய 194 பயணிகள்

சென்னை:

மும்பையில் இருந்து சென்னை வந்த, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கிய போது, விமானத்தின் வால் பகுதி ஓடுபாதையில் உரசியதில் தீப்பொறி உருவானது.

மும்பையில் இருந்து 186 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்களுடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கி ஓடு பாதையில் விமானம் வந்து கொண்டிருந்தபோது அதன் வால் பகுதி, ஓடுபாதையில் உரசி தீப்பொறி உருவானது.

இதனால் அதிர்ச்சியடைந்த விமானி, மிகவும் சாமர்த்தியமாக செயல்பட்டு, விமானத்தை பத்திரமாக இயக்கி பாதுகாப்பாக நிறுத்தினார்.

இதையடுத்து விமானத்தில் இருந்த 186 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்கள் உட்பட 194 பேர் பத்திரமாக வெளியேறினர்.

விமானத்தில் இருந்து பயணிகள் வெளியேறிய பிறகு, ஒதுக்குப்புறமான இடத்திற்கு விமானம் கொண்டு செல்லப்பட்டு நிறுத்தப்பட்டது.

இதனிடையே மீண்டும் சென்னையில் இருந்து பிற்பகல் 2.59 மணிக்கு மும்பைக்கு புறப்படவிருந்த அதே விமானத்திற்கு பதிலாக மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு மாலை 4.50 மணிக்கு, 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

இதனை அறிந்த விமான போக்குவரத்து இயக்குனரகம் பாதிப்பு ஏற்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தை முழுமையாக சீரமைத்து, விமானம் வானில் மீண்டும் பறக்க தகுதி பெற்றது என்ற சான்றிதழை பெற்ற பிறகே விமானத்தை இயக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset