
செய்திகள் இந்தியா
இஸ்ரேல் சுற்றுலா பயணி உட்பட 2 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை: கர்நாடகாவில் பயங்கரம்
பெங்களூரு:
கர்நாடகாவில் உள்ள ஹம்பியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி உட்பட 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர்.
அவர்களுடன் இருந்த ஆண் சுற்றுலா பயணி சனாப்பூர் கால்வாயில் தள்ளி கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹம்பி உலக புகழ்ப்பெற்ற சுற்றுலா தலம் ஆகும்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹம்பி உலக புகழ்ப்பெற்ற சுற்றுலா தலம் ஆகும்.
இங்கு தங்கும் விடுதி நடத்திவரும் பங்கஜ் பாட்டீல் (வயது 42), தனது விடுதியில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகளான அமெரிக்காவை சேர்ந்த டேனியல் ஜேம்ஸ் (வயது 23), ஒடிஸாவை சேர்ந்த பிபாஷ் குமார் (வயது 27), சுற்றுலா வழிகாட்டியான 28 வயதான பெண், இஸ்ரேலை சேர்ந்த 27 வயதான பெண் ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் சனாப்பூர் கால்வாய் அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த உள்ளூர் இளைஞர்கள் 3 பேர் அவர்களிடம், பெட்ரோல் இருக்கிறதா? இல்லையென்றால், ரூ.100 கொடுங்கள் என கன்னடத்தில் கேட்டுள்ளனர்.
அதற்கு பங்கஜ் பாட்டீல், இல்லை என பதிலளித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த இளைஞர்கள், சுற்றுலா பயணிகளிடம் இருந்த கிடாரை பிடுங்கிக்கொண்டு, பணம் தராவிட்டால் அதனை கால்வாயில் போட்டுவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.
இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து அந்த இளைஞர்கள் 3 ஆண்களையும் கற்களால் தாக்கி, கால்வாயில் பிடித்து தள்ளி விட்டனர்.
இஸ்ரேலை சேர்ந்த 27 வயது பெண்ணையும், சுற்றுலா வழிகாட்டியான 28 வயதான பெண்ணையும் மலையடிவாரத்துக்கு இழுத்து சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்த கைத்தொலைபேசிகள், ரொக்கப் பணம், 1 மடிக்கண்னி ஆகியவற்றையும் பறித்து சென்றுள்ளனர்.
கால்வாயில் இருந்து தப்பித்த பங்கஜ் பாட்டீல், அமெரிக்காவை சேர்ந்த டேனியல் ஜேம்ஸை சிரமப்பட்டு காப்பாற்றியுள்ளார்.
ஒடிஸாவை சேர்ந்த பிபாஷ் குமார் நீரில் அடித்து செல்லப்பட்டார். இதுகுறித்து பங்கஜ் பாட்டீல் கங்காவதி போலீஸாருக்கு தகவல் கொடுத்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இச்சம்பவம் இந்தியாவில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 11, 2025, 10:01 am
கேரளாவில் யூடியூப் காணொலி பார்த்து டயட் செய்த இளம் பெண் உயிரிழப்பு
March 11, 2025, 9:56 am
சமஸ்கிருதம்தான் தமிழைவிட பழைமையானது: பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே
March 10, 2025, 1:23 pm
சென்னையில் ஓடுபாதையில் விமானத்தில் தீப்பொறி உருவானது: நூலிழையில் உயிர் தப்பிய 194 பயணிகள்
March 9, 2025, 2:30 pm
கர்நாடகா வரவுச் செலவு திட்டத்தில் சிறுபான்மையினருக்குப் பல சலுகைகள் அறிவிப்பு
March 7, 2025, 12:14 pm
மருந்தின் அளவு அதிகமாகியதால் சிக்கல்… என்னைப் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்
March 7, 2025, 11:48 am
மேலும் 1 லட்சம் இந்தியர்களுக்கு ஆபத்து: அமெரிக்காவில் இருந்து தானாகவே வெளியேற நிர்ப்பந்தம்
March 4, 2025, 1:26 pm