நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கர்நாடகா வரவுச் செலவு திட்டத்தில் சிறுபான்மையினருக்குப் பல சலுகைகள் அறிவிப்பு

பெங்களூர்:

கர்நாடக முதல்வர் சித்தராமையா, 4.09 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மாநில அரசின் வரவுச் செலவு திட்டத்தை நேற்று தாக்கல் செய்தார். 

காங்கிரஸ் அரசின் ஐந்து இலவசத் திட்டங்களுக்கு இந்தாண்டு 51,034 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 

கடந்தாண்டைப் போலவே இந்தாண்டும் மதுபான விலை மீண்டும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சிறுபான்மையினருக்குப் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளை மேம்படுத்த, 1,000 கோடி ரூபாய்க்குத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 

பொருளாதாரத்தில் பின்தங்கியச் சிறுபான்மை சமூகத்தினர் இடையே எளிய திருமணங்களை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு ஜோடிக்கும் திருமண செலவாகத் தலா 50,000 ரூபாய் வழங்கப்படும்.

சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பெண்களின் உயர்கல்வியை ஆதரிக்கும் வகையில், வக்பு வாரியத்திற்கு சொந்தமான காலியிடங்களில் இந்த நிதி ஆண்டில் 16 பெண்கள் கல்லுாரிகள் துவங்கப்படும். 

ஜெயின், புத்த, சீக்கிய சமூகங்களின் வளர்ச்சிக்கு 100 கோடி ரூபாய்; கிறிஸ்துவச் சமூக வளர்ச்சிக்கு 250 கோடி ரூபாய், ஜெயின் கோவில் அர்ச்சகர், சீக்கிய தலைமை கிராண்டிஸ், மசூதியின் இமாம்களுக்கு மாதம் 6,000 ரூபாய் கவுரவத் தொகை வழங்கப்படுவதாக இந்த வரவுச் செலவு திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset