
செய்திகள் இந்தியா
விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பணமோசடி குற்றவாளியின் தனி விமானத்தை அமலாக்க அதிகாரிகள் கைப்பற்றினா்
ஹைதராபாத்:
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் சா்வதேச விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பணமோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்குச் சொந்தமான தனி விமானத்தை இந்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனா்.
ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட ‘ஃபால்கன்’ குழுமம், பல முதலீட்டுத் திட்டங்களின் மூலம் முதலீட்டாளா்களிடம் இருந்து ரூ.1,700 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. மொத்த நிதியில் ரூ.850 கோடி திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.850 கோடி பணத்தை மற்ற 6,979 முதலீட்டாளா்களுக்குச் செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத் தொடா்ந்து, குழுமத்தின் தலைமை நிா்வாக இயக்குநா் (சிஎம்டி) அமா்தீப் குமாா் மற்றும் சிலா் மீது சைபராபாத் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. காவல்துறை விசாரணையில் குழுமத்தின் துணைத் தலைவா், இயக்குநா் ஆகிய இருவா் கைது செய்யப்பட்டனா்.
மோசடி பணத்தில் இருந்து ரூ.24 கோடி செலவிட்டு அமா்தீப் குமாா் தனி விமானம் ஒன்றை கடந்த 2024-ஆம் ஆண்டு வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த விமானத்தில் அமா்தீப் சிங் கடந்த ஜனவரியில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளாா்.
காவல்துறை வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறை புதிய பண மோசடி வழக்கைப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், அமா்தீப் குமாா் வெளிநாடு தப்பிய விமானம், ஹைதராபாத் சா்வதேச விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் தரையிறங்கியது அமலாக்கத் துறை அதிகாரிகளின் கவனத்துக்கு வந்தது.
இதையடுத்து, ஹைதராபாத் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தை அமலாக்கத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை சோதனையிட்டனா். அங்கிருந்த விமானப் பணியாளா்கள் மற்றும் அமா்தீப் குமாரின் உதவியாளா்களிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், அவா்களின் கருத்துகளைப் பதிவு செய்தனா். தொடா்ந்து, விமானம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2025, 3:38 pm
சுற்றுப்பயணிகளிடம் மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகளே இல்லை: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா
April 28, 2025, 4:24 pm
அதிகரித்துவரும் சிசேரியன் அறுவை சிகிச்சைகள்
April 28, 2025, 8:40 am
பெங்களூரு செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு
April 27, 2025, 10:01 pm
நோயாளிகள் உட்பட கண்ணீருடன் விடைபெற்று நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்
April 25, 2025, 12:07 am
பயங்கரவாதிகளை உலகத்தின் ஓரத்துக்கே விரட்டுவோம்: இந்தியப் பிரதமர் மோடி
April 25, 2025, 12:05 am
சிந்து நீர் தடை நடவடிக்கை கோழைத்தனமானது: இந்திய விமானம், வர்த்தகத்துக்கு பாகிஸ்தான் தடை
April 24, 2025, 6:11 pm
காஷ்மீர் தாக்குதல்: விமான டிக்கெட்டுகளின் விலை மூன்று மடங்கு அதிகரித்தது
April 24, 2025, 2:27 pm