நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மருந்தின் அளவு அதிகமாகியதால் சிக்கல்… என்னைப் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்

சென்னை மார்ச் 7 – 

பிரபல பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் தற்கொலை முயற்சி செய்ததாக வெளியான தகவல்களுக்கு, அவர் நேரடியாக விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல பாடல்களை பாடி புகழ் பெற்ற கல்பனா, ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் இளையராஜா இசையில் அறிமுகமாகி, தொடர்ந்து ‘தாஜ்மஹால்’, ‘பிரியமான தோழி’, ‘மைனா’, ‘ரஜினி முருகன்’, ‘மாமன்னன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் பாடியுள்ளார்.

இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக அவர் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை என்பதால், குடியிருப்பு வாசிகள் சந்தேகத்துடன் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் போலீசார் கதவை உடைத்து சென்றபோது, அவர் மயக்க நிலையில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை தூக்க மாத்திரைகள் அதிகம் உட்கொண்டதால் மயக்கம் ஏற்பட்டது என கூறப்பட்டது.

“நான் உயிரோடு திரும்ப வந்ததற்கு என் கணவர் தான் காரணம்” – கல்பனா

தனது நிலை குறித்து விளக்கம் அளித்த கல்பனா, “என் பாடல் வாழ்க்கை மற்றும் உயர்கல்வியில் கவனம் செலுத்துவதால், நீண்ட நாட்களாக சரியான தூக்கம் இல்லை. 

மருத்துவரிடம் சென்றபோது எனக்கு இன்சோம்னியா (தூக்கமின்மை) பாதிப்பு இருப்பதாக கூறினர். அதற்காக அளிக்கப்பட்ட மருந்துகள், சிலவற்றுடன் சேர்ந்து ஓவர் டோஸ் ஆகிவிட்டது. இதனால் நுரையீரல் தொற்று ஏற்பட்டது” என்று கூறினார்.

மேலும், “வெளியூரிலிருந்தாலும், சரியான நேரத்தில் என் கணவர் போலீசாரின் உதவியோடு என்னைக் காப்பாற்றினார். எனக்கு எந்த தனிப்பட்ட பிரச்சனையும் இல்லை. நல்ல குடும்பம் எனக்கு கடவுள் அருளாக கிடைத்துள்ளது. எனவே, என்னைப் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று உறுதியுடன் தெரிவித்தார்.

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset