நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்கா போரை விரும்பினால்,  வர்த்தகப் போர் அல்லது வேறு எந்த வகையான போராக இருந்தாலும் சரி, இறுதி வரை போராட தயார்: சீனா எச்சரிக்கை 

பெய்ஜிங்: 

"அமெரிக்கா போரை விரும்பினால் சீனா இறுதி வரை போராடத் தயாராக இருக்கிறது" என்று அமெரிக்காவிலுள்ள சீனத் தூதரகம் இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவிலுள்ள சீனத் தூதரகம் அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஃபெண்டானில் விவகாரத்தில் அமெரிக்கா உண்மையிலேயே தீர்வு காண விரும்பினால், அதற்கு சரியான வழி, மற்றவரை சமமாக நடத்துவதன் மூலம் சீனாவுடன் ஆலோசனை நடத்துவதே. 

ஒருவேளை அமெரிக்கா போரை விரும்பினால், அது வரி விதிப்பு போர், வர்த்தகப் போர் அல்லது வேறு எந்த வகையான போராக இருந்தாலும் சரி இறுதி வரை போராட நாங்கள் தயார்" என்று தெரிவித்துள்ளது. இதனிடையே, சீன பொருள்கள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்புக்கு ஃபெண்டனில் (வலி நிவாரணியாக பரிந்துரைக்கப்படும் ஒருவகை மருந்து) விவகாரம் ஒரு அற்பமான சாக்கு என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாக்க சீனா எடுத்துள்ள நடவடிக்கைகள் சட்டப்பூர்வமானவை, அவசியமானவை. பெண்டானில் விவகாரத்தைப் பொறுத்தவரை அமெரிக்காவைத் தவிர வேறு யாரும் அதற்கு பொறுப்பு இல்லை. அமெரிக்க மக்கள் மீதான மனிதாபிமானம் மற்றும் நல்லெண்ண உணர்வின் அடிப்படையில், அமெரிக்காவுடன் இணைந்து நாங்கள் வலுவான நடவடிக்கை எடுத்துள்ளோம்.

எங்களின் முயற்சிகளை அங்கீகரிப்பதற்கு பதிலாக, அமெரிக்கா எங்கள் மீது பழி போட்டும், வரிகளை விதித்தும் சீனாவை அழுத்த முயற்சி செய்கிறது. அவர்களுக்கு உதவியதற்காக அவர்கள் எங்களைத் தண்டிக்கிறார்கள். இது ஒரு போதும் அமெரிக்காவின் பிரச்சினையைத் தீர்க்கப் போவது இல்லை. மேலும் போதை பொருள் ஒழிப்புத் தொடர்பான நமது பேச்சுவார்த்தைகள், ஒத்துழைப்பை குறைத்தும் மதிப்பிடுகிறது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபெண்டானில் விவாகரத்தைக் காரணம் காட்டி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் சீன பொருள்களுக்கு ஏற்கனவே அறிவித்திருந்த 10 சதவீத வரியுடன் கூடுதலாக 10 சதவீதம் வரியை செவ்வாய்க்கிழமை அறிவித்து அமல்படுத்தியது. இந்த புதிய கூடுதல் வரி விதிப்பு, கனடா, மெக்சிகோ பொருள்களுக்கான 25 சதவீத வரி விதிப்புடன் செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset