நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மலேசியாவில் இருந்து அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு வந்த பயணியிடம் இருந்து பல கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

பஞ்சாப்:

பஞ்சாப் விமான நிலையத்திற்கு வந்த நபரிடம் இருந்து பல கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மலேசியாவில் இருந்து வந்த அந்த நபரிடம் சோதனை செய்ததில் கோடிக்கணக்கிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

எல்லை பகுதிகள் வழியாக நாட்டுக்குள் தங்கம், போதை பொருள் ஆகியவை கடத்தப்படுவது தொடர் கதையாகி வருகிறது. 

குறிப்பாக, பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளில் இருந்து எல்லை வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவது அதிகாரிகளுக்கு பெரும் சவாலை அளித்து வருகிறது.

இந்த நிலையில், மலேசியாவில் இருந்து பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரில் உள்ள விமான நிலையத்திற்கு வந்த நபரிடம் கோடிக்கணக்கிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி, மந்தீப் சிங் என்பவர் மலேசியாவிலிருந்து அமிர்தசரஸ்க்கு விமானத்தில் வந்தடைந்தார்.

அவரது பொருட்களை சோதனை செய்தபோது, ​​அதிகாரிகள் 8.17 கிலோ எடையுள்ள போதைப் பொருளைக் கண்டுபிடித்தனர். 

அதன் மதிப்பு ரூ.8.17 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், மந்தீப் சிங் மீது போதைப்பொருள் சட்டம் 1985இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

மற்றொரு வழக்கில், சிங்கப்பூரிலிருந்து வந்த ஒரு பயணியிடமிருந்து 400 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். 

அவரிடமிருந்து சுமார் ரூ.35.60 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலி, வளையல் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset