
செய்திகள் ASEAN Malaysia 2025
2024 தலைசிறந்த முஸ்லிம் தலைவராக அபாங் ஜொஹாரி கௌரவிப்பு: டத்தோஶ்ரீ முஹம்மத் இக்பால் விருது வழங்கினார்
கோலாலம்பூர்:
2024ஆம் ஆண்டுக்கான தலைசிறந்த முஸ்லிம் தலைவராக சரவாக் மாநில பிரிமியர் டத்தோ பத்திங்கி டான்ஶ்ரீ அபாங் ஜொஹாரி துன் ஒப்பெங் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்
2025ஆம் ஆண்டு ஆசியான், சரவாக் வர்த்தக & பொருளாதார கூட்டத்தில் அபாங் ஜொஹாரிக்கு உலக முஸ்லிம் தலைமைத்துவ கலந்துரையாடலின் தலைவர் டத்தோஶ்ரீ முஹம்மத் இக்பால் விருது வழங்கி கௌரவித்தார்
அபாங் ஜொஹாரியின் தூரநோக்கு சிந்தனையிலான தலைமைத்துவம், சரவாக் மாநில பொருளாதார மேம்பாட்டிற்கான பங்களிப்பு, சரவாக் மாநில சமூக நல்லிணக்கம் ஆகியவற்றிற்கு அபாங் ஜொஹாரி ஆற்றிய சேவைகள் குறித்து இந்த தலைசிறந்த முஸ்லிம் தலைவருக்கான விருது அவருக்கு வழங்கப்பட்டது
சரவாக் மாநிலத்தை இலக்கவியல் மாநிலமாகவும் பல்வேறு துறைகளில் அதன் மேம்பாட்டினை உறுதிப்படுத்தவும் இந்த விருது வழங்கப்பட்டது
மேலும் THIANG SHENG AUTOMOBILE நிறுவனத்தின் இயக்குநரான TEO YONG HUA ஆசியானின் தலைசிறந்த வர்த்தகர் எனும் விருதினைப் பெற்றார்
அதோடு வர்த்தக துறையில் வாழ்நாள் சாதனையாளர் விருதை ITECH SYSTEM ENGEENIRING SDN BHD, KK SUPERMART & SUPERSTORE SDN BHD நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான டத்தோஶ்ரீ டாக்டர் கேகே சாய் க்கு வழங்கப்பட்டது
இந்த ஆசியான் சரவாக் வர்த்தக பொருளாதார கூட்டத்தில் டத்தோஶ்ரீ முஹம்மத் இக்பால், சரவாக் மாநில துணை பிரிமியர் டத்தோ அமார், டாக்டர் சிம் குய் ஹியான், டத்தோ அமார் அவாங் தெங்கா அலி ஹசான் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
- மவித்ரன்
தொடர்புடைய செய்திகள்
April 15, 2025, 3:32 pm
சீனாவின் மிகப் பெரிய வர்த்தக பங்காளியாக ஆசியான் தொடர்ந்து நிலைத்திருக்கும்
April 6, 2025, 12:56 pm
அமெரிக்கா விதித்திருக்கும் வரிகள் தொடர்பாகக் கூட்டாகப் பதில் சொல்ல ஆசியான் முடிவு
April 5, 2025, 3:14 pm
மனிதாபிமானப் பணிக்காக மியான்மார் பயணத்தை முஹம்மத் ஹசான் தொடங்கினார்
February 26, 2025, 12:22 pm
ஆசியானில் இணையும் திமோர்-லெஸ்டே நாட்டை வரவேற்கிறோம்: பிரதமர் அன்வார்
February 25, 2025, 9:49 pm