நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அந்நியத் தொழிலாளர்கள் இல்லாததால் உலோக மறுசுழற்சி கடைகள் மூடப்படும் அபாயம்; பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும்: டத்தோஸ்ரீ ஆறுமுகம்

கோலாலம்பூர்: 

மலேசிய இந்தியர் உலோக பொருள் மறுசுழற்சி கடைகளில்  வேலை செய்ய அந்நிய தொழிலாளர்கல் இல்லாததால் நாங்கள் பெரும் நெருக்கடியை எதிர் நோக்கி வருகிறோம்.

மிம்தா தலைவர் டத்தோஸ்ரீ ஆறுமுகம் இதனை வேதனையோடு தெரிவித்தார்.

அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள அரசாங்கம் அனுமதி வழங்க கோரி பல ஆண்டுகளாக போராடி வருகிறோம்.

கடந்த 13 ஆண்டுகளாக நாங்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறோம்.

மலேசிய இந்தியர் உலோக பொருள் மறுசுழற்சி சங்கத்தில் 640 உறுப்பினர்கள் முறையாக லெசென்ஸ் பெற்று கடைகளை நடத்தி வருகின்றனர்.

அரசாங்கத்திற்கு முறையாக வரி செலுத்தி வருகிறோம்.

3டி எனப்படும் கடினமான  இந்த துறையில் வேலை செய்ய உள்ளூர் தொழிலாளர்கள் முன் வருவதில்லை.

இந்தியா, நேப்பாளம் மற்றும் வங்காளதேசத் தொழிலாளர்கள் எங்களுக்கு உடனடியாக தேவை படுகிறார்கள்.

குறிப்பாக 10,000 அந்நியத் தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள்.

முன்பு ஒரு அந்நியத் தொழிலாளர் நாடு திரும்பினால் அவருக்கு பதிலாக  மாற்றுத் தொழிலாளர் வேலைக்கு அமர்த்திக் கொள்ள அனுமதி வழங்கப்படும்.

ஆனால் இப்போது மாற்று தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள அரசாங்கம் அனுமதி வழங்குவதில்லை.

நிலமை இப்படியே போனால் நாங்கள் கடைகளை மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என்று அவர் வேதனையோடு தெரிவித்தார்.

அந்நிய தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக மனிதவள அமைச்சை பலமுறை சந்தித்து மகஜரை கொடுத்து இருக்கிறோம் என்று மிம்தா பொருளாளர் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ளும் விவகாரத்தில் உள்துறை அமைச்சும் சம்பந்தப்பட்டுள்ளது.

இரு அமைச்சும் எங்கள் பிரச்சனையை சீர்த்தூக்கி பார்க்க வேண்டும்  என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே, மிம்தா செயலாளர் முத்தப்பன் கூறுகையில்,

கட்டுமானத் தொழில் துறை, விவசாய துறையில் பணிபுரிய அந்நியத் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கி உள்ளது.

ஆனால் மறுசுழற்சி துறையில் அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள அனுமதி மறுக்கப்படுவது ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

எங்களுக்கு மட்டும் அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள உள்துறை அமைச்சு மற்றும் மனிதவள அமைச்சு அனுமதி மறுப்பது ஏன் என்று அவர் கேள்வியை முன் வைத்தார்.

அதே வேளையில் இந்த விவகாரத்தில் உடனடியாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலையிட வேண்டும். இதுவே எங்களின் கோரிக்கையாகும்.

இன்று மிம்தா அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

- பார்த்தின் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset