
செய்திகள் ASEAN Malaysia 2025
ஆசியானில் இணையும் திமோர்-லெஸ்டே நாட்டை வரவேற்கிறோம்: பிரதமர் அன்வார்
கோலாலம்பூர்:
இந்த ஆண்டு ஆசியானில் புதிய உறுப்பினராக இணையும் நாட்டைத் தாம் வரவேற்பதாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
ஆசியானில் உறுப்பு நாடாக்க இருப்பது வெறும் ஒரு அடையாளம் மட்டுமல்ல.
மாறாக ஒற்றுமையாக உலகளாவிய சவால்களை ஒன்றாக எதிர்கொள்ளும் திறன் மூலம் பெறப்பட வேண்டிய ஒரு சலுகை என்று அவர் வலியுறுத்தினார்.
ஆசியானில் திமோர்-லெஸ்டே தொடர்ந்து தீவிரப் பங்காற்றும் என்றும் மற்ற உறுப்பு நாடுகளுடன் தங்கள் உறவை வலுப்படுத்தும் என்றும் தாம் எதிர்ப்பார்ப்பதாக அன்வார் கூறினார்.
ஆசிய நாடுகள் வளர்ச்சியை மேம்படுத்தும் குறிக்கோளுக்கு இணங்க, எந்த நாடும் பின்தங்கியிருக்கக்கூடாது என்பதை உறுதி செய்வதில் ஆசியான் உறுதி பூண்டுள்ளது.
ஆசியான் உலகளவில் போட்டித்தன்மை வாய்ந்த பொருளாதார கூட்டமைப்பாக இருப்பதை உறுதி செய்வதற்கு வலுவான அரசுத் தந்திர உறவுகளின் முக்கியத்துவத்தையும் இது வலியுறுத்தியது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 15, 2025, 3:32 pm
சீனாவின் மிகப் பெரிய வர்த்தக பங்காளியாக ஆசியான் தொடர்ந்து நிலைத்திருக்கும்
April 6, 2025, 12:56 pm
அமெரிக்கா விதித்திருக்கும் வரிகள் தொடர்பாகக் கூட்டாகப் பதில் சொல்ல ஆசியான் முடிவு
April 5, 2025, 3:14 pm
மனிதாபிமானப் பணிக்காக மியான்மார் பயணத்தை முஹம்மத் ஹசான் தொடங்கினார்
February 25, 2025, 9:49 pm